2014 vs 2024.. திமுக செய்த அதே தவறை செய்த அதிமுக.. சரித்திரம் மட்டுமே மாறவே இல்லை
சென்னை: 2014ல் திமுக பலவீனமான நிலையில் இருந்த நிலையில், தனது கூட்டணி கட்சியான காங்கிரஸை பிரிந்து தனித்து போட்டியிட்டது.அதில் படுதோல்வி அடைந்தது. அதேபோன்று தான், தனது கூட்டணி கட்சியான பாஜக மற்றும் பாமக இல்லாமல் போட்டியிட்டதால் அதிமுக படுதோல்வி அடைந்திருக்கிறது. இதன் மூலம் சரித்திரம் மாறவே இல்லை.
சட்டசபை தேர்தலாகட்டும், லோக்சபா தேர்தல் ஆகட்டும், திமுக, அதிமுக இரண்டுமே படுதோல்வியை சந்தித்து மீண்டு வந்துள்ளன. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாத அளவிற்கு 1991ல் திமுக தோற்றதாகட்டும், அதேபோல் 1996ல் அதிமுக தோற்றதாகட்டும் எல்லாமே தமிழகத்தில் நடந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணி கணக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் விஷயமாக உள்ளது. 2000க்கு பிறகு சரித்திரங்களை புரட்டி பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது.

2001ம் ஆண்டில் ஜெயலலிதாவின் வெற்றிக்கு வலுவான கூட்டணி தான் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அன்றைக்கு வலுவான தலைவராக இருந்த மூப்பனாரின் கூட்டணி தான் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அதேநேரம் 2004 லோக்சபா தேர்தலில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்ட 40க்கு 40 இடங்களில் அதிமுக பாஜக கூட்டணியை தோற்கடித்தன. மீண்டும் வாஜ்பாய் ஆட்சிக்கு வரமுடியாமல் போக தமிழ்நாடும், ஆந்திராவும் தான் அன்றைக்கு முக்கிய காரணமாகும்.
ஆனால் 2006ல் திமுக கூட்டணிக்கு மைனாரிட்டி ஆட்சியாக தொடர்ந்ததற்கும்,அதிமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிகதான் காரணம்.. அதேபோல் 2009ல் கூட திமுக அதிமுக இரண்டு கூட்டணி விவகாரத்தில் சரியாக செயல்பட்ட போதிலும், விஜயகாந்த்தான் அவர்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார். 2011ல் திமுக படுதோல்வி அடையவும், எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கவும் விஜயகாந்த்துடன் ஜெயலலிதா அமைத்த கூட்டணி தான் காரணம்.. அதாவது கூட்டணி பலமாக இருந்ததால் அசுர பலத்துடன் 2011ல் அதிமுக ஆட்சியை பிடித்தது.
ஆனால் அதேநேரம் 2014ல் அதிமுக தனித்து போட்டியிட்டு சவால்விட்டு ஜெயித்தது. அதற்கு காரணம், திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸை பிரிந்து தனித்து களம் கண்டது. கம்யூனிஸ்டுகளும் தனித்து களம் கண்டது தான். அப்போது திமுக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை.
அதேநேரம் புதிதாக கூட்டணி அமைந்து களம் கண்ட பாஜக கூட்டணி, தமிழகத்தல் இரண்டு தொகுதிகளையும், புதுச்சேரியில் ஒன்று என மூன்று இடங்களில் வென்றார்கள்.. திமுக அன்று தோற்றுப்போக வலுவான கூட்டணி இல்லாததும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அதேபோல் 2016ல் அதிமுக ஜெயிக்கவும், திமுக தோற்கவும், மக்கள் கூட்டணி என திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனியாக பிரிந்து போனதே காரணமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் 2014ல் திமுக செய்த அதே தவறை அதிமுக செய்துள்ளது. வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் நிச்சயம் அதிமுக ஓரளவு வெற்றிபெற்றிருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.. தமிழக லோக்சபா தேர்தலில் திமுக, அதிமக , பா.ஜனதா ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட்டியிட்டது.
இந்த தேர்தலில் 4 முனை போட்டி இருந்தது. அதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, இந்திய முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்று இருந்தன. இந்த கூட்டணிக்கு நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஆதரவு தெரிவித்து இருந்தது.
அ.திமுக கூட்டணியில் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும், பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க, த.மா.கா., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்று இருந்தன. நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 46.97 சதவீத வாக்குகளையும், அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீத வாக்குகளையும், பா.ஜனதா கூட்டணி 18.28 சதவீத வாக்குகளையும் பெற்று இருக்கிறது. அதில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி வாக்குகளை மொத்தமாக சேர்த்தால் கூட 41.33 சதவீத வாக்குகள்தான் வருகிறது. இது தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்குகளை விட 5.64 சதவீத வாக்குகள் குறைவு தான்.
எனினும் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் திமக கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்குகளையும், அதிமுக மற்றும் பா.ஜனதா கூட்டணி பெற்ற வாக்குகளையும் கூட்டி பார்த்தால் சில தொகுதிகளில் அவர்களுக்கு எளிதாக வெற்றி கிடைத்திருக்கும். குறிப்பாக சொல்வது என்றால் விருதுநகர், சிதம்பரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருப்பூர், கோவை, கடலூர், மதுரை, தென்காசி ஆகிய 12 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களின் ஓட்டுக்கள் அதிகம்.
அதே போல் மதுரை, கரூர், பொள்ளாச்சி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் குறைந்தளவே ஓட்டுக்கள் வித்தியாசம் இருந்தது. எனவே கூட்டணி அமைத்து இருந்தால் 16 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் வென்று இருக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள் சிலர்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications