கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால்.. யாராக இருந்தாலும் நீக்கப்படுவீர்கள்.. ஓபிஎஸ் -இபிஎஸ் எச்சரிக்கை!
சென்னை: அ.தி.மு.க.வின் சட்ட திட்டங்களுக்கு மாறாக செயல்பட்டால் யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க நிர்வாகத்தை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பரிமாறக் கூடாது என்று ஓபிஎஸ் -இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருக்கின்றனர்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கழக தலைவர்கள் பெயரில் பேரவைகள் அமைப்பது, கழக தலைவர்கள், முன்னோடிகள் பெயர்களையும் படங்களையயும் சிதைத்து அநாகரிகமான கருத்துக்களை வெளியிடக் கூடாது. கழக நிர்வாகத்தை விமர்சித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை ஊடகங்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ கருத்து பரிமாற்றம் செய்யக் கூடாது.
அதிமுக அடுத்து மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயணம், முன்னேற்பாடுகள் குறித்து யாரும் கருத்து தெரிவிக்க கூடாது. எந்தவித அடிப்படை காரணம் இன்றி கழகத்தை யாரும் விமர்சிக்க வேண்டாம். அதிமுகவுக்காக உழைக்க விருப்பவர்கள் மக்கள் தொண்டில் கவனம் செலுத்துங்கள்.
அதிமுகவில் தனிநபர் துதி பாடலுக்கு இடமில்லை. அ.தி.மு.க.வின் சட்ட திட்டங்களுக்கு மாறாக செயல்பட்டால் தயவு தாட்சணமின்றி யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கழக தலைமையின் கட்டளையை மீறி செயல்பட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவீர்கள். இவ்வாறு பிஎஸ் -இபிஎஸ் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
