5 அணிகள் இருக்கு.. ஐபிஎல் தொடரே நடத்தலாம்.. அதிமுகவை கலாய்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இபிஎஸ் அணி, ஒபிஎஸ் அணி, சசிகலா அணி என மொத்தம் 5 அணிகள் இருப்பதாகவும் அதிமுக அணிகளை வைத்து ஒரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியே நடத்தலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசினார்.

திமுக சார்பில் 2 ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஐபிஎல் போட்டிகள் இப்போது நடக்குது. கிட்டதட்ட 10 அணிகள் விளையாடுறாங்க..அதிமுகவிற்கு தனியாக ஒரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியே நடத்தலாம்.

AIADMK have Five teams, we can conduct a IPL- Minister Udhayanidhi stalin Slams

ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி, சசிகலா அணி, தீபா அணி என 5 அணிகள் இருக்கு. தீபா அணிக்குள் இரண்டு அணிகள் இருக்கு...டிரைவர் அணி, ஹஸ்பண்ட் அணி என இருக்கு.. சமீபத்தில் நான் பிரதமரை சந்தித்து விட்டு வந்தேன். மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு வந்தேன். பஞ்சாயத்துக்காக நான் செல்லவில்லை.

தைரியமாக அவரிடம் உட்கார்ந்து பேசி நீட் விலக்கு கொடுங்க என அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன். மக்களுடைய கோரிக்கைக்காகத்தான் நான் பார்த்து விட்டு வந்தேன். ஆனால், இங்கே இருந்து இரண்டு மூன்று கோஷ்டி அப்பப்போ போகிறது. டெல்லியில் தான் பஞ்சாயத்து தலைவர் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு போகும் முன் பேட்டி கொடுத்தார்.

அப்போது எங்க பாஸ் டெல்லியில் தான் இருக்கிறது. இங்கே இருக்கிறவர்களுக்கு தகுதியே இல்லை என்றார். அதேபோல் இங்கே இருக்கிற பாஜக தலைவரும் அதிமுகவோடு கூட்டணி வைத்தால் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிவிடுவேன் என்று சொன்னார். மருத்துவமனைக்கு சென்றால் டாக்டர்கள் மருந்து எழுதி தருவார்கள். அந்த மருந்து சீட்டில் ஆமு, ஆபி என எழுதி தருவார்கள்.

அதாவது, ஆகாரத்திற்கு முன் ஆகாரத்திற்கு பின் என குறிப்பிட்டு இப்படி கொடுப்பார்கள். அதேபோலத்தான் இப்போது அதிமுக காரர்களுக்கும் பாஜக காரர்களுக்கும் ஒன்று இருக்கு. அமு, அபி அதாவது அமித்ஷாவிற்கு முன் அமித்ஷாவிற்கு பின் என செயல்படுகிறார்கள். அமித்ஷாவை பார்த்து விட்டு வந்து இரண்டு பேரும் சமாதானம் ஆகிவிட்டார்கள்.

எல்லாவற்றையும் இலவசமாக கொடுப்பதாக நம்மை விமர்சிக்கும் பாஜக, கர்நாடகவில் தேர்தல் வாக்குறுதியாக கட்டணம் இல்லா பஸ் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இது நமது திட்டம்.அதேபோல உரிமைத்தொகை..தேர்தல் அறிக்கையை கூட பாஜக காப்பி அடித்துதான் செய்யும்.

எம்.ஜி.ஆர் எப்போதும் சொல்வார். ரத்தத்தின் ரத்தங்களே என்று..அதிமுகவில் தற்போது பாதி ரத்தம் இல்லை. இருக்கிற ரத்தத்தையும் பாஜக அட்டை மாதிரி ஒட்டி உறிந்து கொண்டு இருக்கிறது. திராவிடம் என்றால் அனைவரும் சமம். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிடம். ஏழை பணக்காரன் இருக்கக் கூடாது.

AIADMK have Five teams, we can conduct a IPL- Minister Udhayanidhi stalin Slams

மேல்ஜாதி, கீழ் ஜாதி இருக்கக்க்கூடாது. ஆண், பெண் சம உரிமை வேண்டும் என்பதற்காக உருவானதுதான் திராவிடம். அது காலாவதியாகிவிட்டதாக சொல்கிறார் ஆளுநர். உங்கள் சனாதனத்தை அழிக்க வந்ததுதான் எங்கள் திராவிடம். தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை. இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டியாக இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி' இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+