அதிமுக அலுவலக மோதல்.. எடப்பாடி ஆதரவாளர்களை கைது செய்ய இடைக்கால தடை.. சென்னை மாவட்ட கோர்ட் உத்தரவு!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் வழக்கு தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், வருகிற 25-ந் தேதி வரை இபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் ஓ. பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுக்குழுவை கூட்ட முயற்சித்த எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓபிஎஸ் தரப்பு சட்ட போராட்டங்களால் முட்டுக்கட்டை போட முயன்றது .
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு வலுத்தது. இதற்கிடையே, நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியதால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

தலைமை அலுவலகத்தில் மோதல்
அப்போது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்தார். இதனால், அலுவலகம் முன்பாக கூடியிருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. இரு தரப்பினரும் கற்கள், உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் போலீசார், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என 47 பேர் காயமடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

60 பேருக்கு சம்மன்
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த பயங்கர மோதல் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் என மொத்தம் 400 பேர் மீது கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே முதல்கட்டமாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் தலா 30 பேர் என மொத்தம் 60 பேருக்கு ராயப்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பினர்.

முன்ஜாமீன் மனு
ஆஜராகும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள், என்று தகவல் வெளியானது. இதனால் சம்மன் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 19 ஆம் தேதி போலீசில் ஆஜராகவில்லை. கைது செய்யப்படுவார்கள், என்ற பயத்தால் போலீஸ் சம்மன் பெற்ற அனைவரும் கோர்ட்டில் முன் ஜாமீன் பெறுவார்கள் எனக் கூறப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சேகரித்தனர்.
இதனால், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், தென்சென்னை தெற்கு மாவாட்ட செயலாளர் உள்ளிட்ட 4 மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 11 பேர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
Recommended Video

25-ந் தேதி வரை
இந்த மனு நீதிபதி தங்க மாரியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் மனுவுக்கு கால அவகாசம் அளிக்குமாறு கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். மேலும் அவர், வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்ட வருகிற 25-ந் தேதி வரை மாவட்ட செயலாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என்று ராயப்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
-
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?












Click it and Unblock the Notifications