சட்டசபை தேர்தல் வியூகம்.. சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுவது உறுதப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணி அப்படியே தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இருந்தபோதும் அதிமுகவிடம் தேமுதிக 41 தொகுதிகளை கேட்டு வருவதால் அந்த கட்சி கூட்டணியில் இடம்பெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தொடங்கிவிட்டது. தேர்தல் அறிக்கை தயாரிப்பதிலும் திமுக முமுரமாக உள்ளது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் வியூகம் தொடர்பாக விவாதிக்க சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் நடைபெறும் முதல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது.

ஏற்கனவே பூத் கமிட்டி தொடர்பான விவரங்களை இன்றைய ஆலோசனை கூட்டத்தில் தரவேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இன்றைய கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் என மொத்தம் 97 பேர் பங்கேற்றிருந்தனர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications