“அதிமுக தனிக் கட்சி இல்லை.. பாஜகவின் கிளை அமைப்பு”.. முதல்வர் ஸ்டாலின் சரமாரி தாக்கு!
சென்னை: "அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ வழக்குகளைக் காட்டி, மிரட்டி, அமைக்கப்பட்டிருக்கிற தேர்தல் கூட்டணியோடு வந்த பிரதமர் மோடி, அதிமுகவின் பெயரைக் கூட சொல்லவில்லை. ஏனெனில், அதிமுக என்பது தனிக்கட்சி கிடையாது. பாஜகவின் கிளை அமைப்பு. அந்த கிளை அமைப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, மோடி கொடுக்காத வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்." என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் உன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "வரவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குமான தேர்தல். தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் அடுக்கடுக்கான துரோகங்களை பாஜக செய்து வருகிறது.

இந்திய நாட்டையும் தன்மானமிக்க தமிழ்நாட்டையும் காக்கும் லட்சிய எண்ணங்களை கொண்ட கூட்டணி. ஆனால் பாசிச பாஜக கவலைக்கிடம் செய்து வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை தங்களுக்கு ஏற்றமாதிரி சிதைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாஜக எவ்வளவு ஆபத்தானது என்றால், அவர்களைப் பொறுத்தவரை ஒரே நாடு என்றால் ஒரு மதம், ஒரு மொழி, ஒரே தலைமை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். மதச்சார்பின்மை, சோசலிசம், சமூக நீதி, பொதுவுடைமை, பொது உரிமை போன்ற சொற்களைக் கேட்டாலே பாஜகவுக்கு கசக்கிறது. இந்த சொற்களை எல்லாம் ஆட்சியில் இருந்து மட்டுமல்ல, அதிகாரத்தில் இருந்தும் அழிக்க துடியாகத் துடிக்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத்தில் பாஜக நினைத்த மாதிரி வெற்றி பெற்றிருந்தால் இப்போது இருப்பதை விட இன்னும் மோசமாகி இருக்கும். இந்தியாவில் இருக்கிற ஜனநாயக கட்சிகளை எல்லாம் இணைத்து பாஜகவின் வேகத்தை குறைத்து உள்ளோம். ஆனாலும் பெரும்பான்மை இல்லாத நேரத்திலேயே தனது நகத்தை பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு காயங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
வருகிற தேர்தல், தமிழ்நாட்டுக்கும் என்டிஏ கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல். இதை புரிந்து கொள்ள வேண்டும். அடுக்கடுக்கான துரோகங்களை செய்து விட்டு, துரோகங்களுக்கு ஏற்ற கொத்தடிமைகளை ஒன்று சேர்த்து அவர்கள் முதுகில் ஏறி வருகிறது பாஜக.
அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ வழக்குகளைக் காட்டி, மிரட்டி, அமைக்கப்பட்டிருக்கிற தேர்தல் கூட்டணியோடு வந்த பிரதமர் மோடி, அதிமுகவின் பெயரைக்கூட சொல்லவில்லை. ஏனெனில், அதிமுக என்பது தனிக்கட்சி கிடையாது. பாஜகவின் கிளை அமைப்பு.
அந்த கிளை அமைப்பைச் சேர்ந்த பழனிசாமி, மோடி கொடுக்காத வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயரை அழித்திருக்கும் திட்டத்தில் 125 நாட்கள் வேலை தருவோம் என்று பாஜக சொல்கிறது. ஆனால் பழனிசாமி, 150 நாட்கள் வேலை தருவோம் என்கிறார்.
தமிழ்நாட்டில் தோல்வி உறுதி என்பதால், இந்த பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டை பாஜக அரசு புறக்கணித்திருக்கிறது. இந்த நிலையில், பாஜக ஆட்சி எனக் கூறக் கூச்சப்பட்டு, டபுள் என்ஜின் ஆட்சி என்று கூறுகின்றனர். அது டபுள் எஞ்சின் ஆட்சி அல்ல, டப்பா எஞ்சின் என்று மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.
எடுத்துக்காட்டுகளாக, போதை மருந்து கடத்தலுக்கு குஜராத், குற்றச் சம்பவங்களுக்கு உத்தர பிரதேசம், மாநிலம் பற்றியெரிய வேண்டுமா மணிப்பூர், பட்டியலின மக்களுக்கு எதிராக அதிக வன்கொடுமைகளுக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம். நாட்டுக்கே முன்னோடியான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறோம். அதிக வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை திமுக உயர்த்தியிருக்கிறது. இங்கு பாஜகவுக்கு வேலையே இல்லை.
அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பில் நம்முடைய கூட்டணி 45 விழுக்காடு ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால், நமக்கான ஆதரவு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாட்டில் நாம் பெறப்போகும் வெற்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழங்கக் கூடிய வெற்றியாக இருக்க வேண்டும். ஒற்றுமை இருக்குமிடத்தில் பாஜகவின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது. தோழமைக் கட்சிகள் அனைத்தும் இன்னும் வேகமாக பரப்புரையை தொடங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications