'சேலம் எங்களின் கோட்டை'.. மீண்டும் நிரூபிக்கும் அ.தி.மு.க.. 11 தொகுதிகளில் 9-ல் அதிரடி முன்னிலை!
சென்னை: சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணபட்டன.
அதில் திமுக முன்னிலை வகித்தது. தற்போது நிலையில் தற்போது இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கணிப்புகள்
இதுவரை திமுக 134 இடங்களிலும், அதிமுக 99 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் திமுக 180 முதல் 190 வரையிலான இடங்களை பெற்று அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.

அதிமுக ஆதிக்கம்
ஆனால் அதற்கு மாறாக தற்போது அதிமுக, திமுகவுக்கு கடுமையான போட்டி கொடுத்து வருகிறது. குறிப்பாக அதிமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் மேற்கு மண்டலத்தில் அதிமுக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.

சேலத்தில் முன்னிலை
சேலம் தெற்கு வீரபாண்டி .ஆத்தூர் கெங்கவல்லி எடப்பாடி. ஏற்காடு ஓமலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் சென்று வருகின்றனர்.அதிமுக கூட்டணியில் இருக்கும் பா.ம.க. வேட்பாளர்கள் சேலம் மேற்கு தொகுதியிலு. மேட்டூர் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை
.எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நான்காவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சம்பத்குமாரை விட சுமார் 14 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் சேலம் தனது கோட்டை என்பதை அதிமுக நிரூபித்துள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications