சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விழுப்புரத்தில் சிவி சண்முகம் செம்ம பைட்.. 7 தொகுதியில் நூலிழை வித்தியாசம்.. அதிமுக முன்னிலை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் எந்த கட்சிக்கு எந்த தொகுதியில் வெல்ல வாய்ப்பு என்பது குறித்து தேர்தலுக்குமுன்பு நடத்திய கருத்துக்கணிப்பை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. வடக்கில் உள்ள முக்கியமான 11 தொகுதிகளில் 7 இடங்களில் அதிமுக முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டுள்ளது.

வடமாவட்டங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளில் திமுக அதிமுக இடையே பலமான போட்டி நிலவுகிறது என தந்தி டிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேட்டூர்,வீரபாண்டி, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, ரிஷிவந்தியம், வானூர், விழுப்புரம், மயிலம், திண்டிவனம், விக்கிரவாண்டி உள்பட 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி நூலிழை வித்தியாசத்தில் 7 இடங்களிலும், திமுக கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்ணில் மோடி.. தோளில் துண்டை போட்டுக்கு கொண்டு.. மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செம்ம என்ட்ரி!மதுரை மண்ணில் மோடி.. தோளில் துண்டை போட்டுக்கு கொண்டு.. மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செம்ம என்ட்ரி!

அதிமுக

அதிமுக

மேட்டூர் தொகுதியில் அதிமுக+ 44-50 சதவீதம் ஆதரவை பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக+ 42-48% ஆதரவை பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளது. அமமுக +2-5% ஆதரவுடன் 3ம் இடத்தையும்,, நாம் தமிழர் 4-7% ஆதரவுடன், மநீம+1-4% ஆதரவுடன், ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளதாக தந்தி டிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக

திமுக

வீரபாண்டி தொகுதியில் திமுக+ 40-46% ஆதரவுடன் முன்னிலை வகிக்கிறது. அதிமுக+ 38-44%, ஆதரவுடன் 2வது இடத்தையும், அமமுக +7-13%, ஆதரவுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. நாம் தமிழர் 3-6%, மநீம+2-5% ஆதரவுடன் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளதாக தந்திடிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக

திமுக

சங்கராபுரம் தொகுதியில் திமுக+ 44-50% ஆதரவுடன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதிமுக+ 42-48% ஆதரவுடன் 2 வது இடத்தை பிடிக்கும் என்றும் அமமுக +3-6% ஆதரவுடன் மூன்றாம் இடத்தையும்,. நாம் தமிழர் 3-6% மற்றும் மநீம+1-4% ஆதரவுடன் அடுத்தடுத்த இடத்தையும் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக

அதிமுக

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக+ 43-49% ஆதரவுடன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. திமுக+ 42-48% 2 வது இடத்தை பிடிக்கும் என்றும், , அமமுக +3-6% ஆதரவை பெறும் என்றும் நாம் தமிழர் 4-7%, மநீம+1-4% ஆதரவையும் பெற வாய்ப்பு உள்ளதாக தந்திடிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக

அதிமுக

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக+ 43-49% ஆதரவுடன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது, திமுக+ 42-48% 2 வது இடத்தை பிடிக்கும் என்றும், அமமுக +3-6% ஆதரவையும், நாம் தமிழர் 3-6%, மநீம+2-5% ஆதரவையும் பெற்று அடுத்தடுத்த இடத்தையும் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவியின் இன்றைய சர்வே முடிவில் கூறப்பட்டுள்ளது.

திமுக

திமுக

ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக+ 44-50% ஆதரவுடன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது, அதிமுக+ 41-47% 2 வது இடத்தை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது , நாம் தமிழர் 4-7%, ஆதரவையும், அமமுக +3-6% ஆதரவையும், மநீம+1-4% ஆதரவையும் பெற வாய்ப்பு உள்ளதாக தந்திடிவி கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக

அதிமுக

தந்திடிவி கணிப்பில் வானூர் தொகுதியில் அதிமுக+ 44-50% ஆதரவுடன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது, , திமுக+ 43-49% 2 வது இடத்தை பிடிக்கும் என்றும், அமமுக +2-5% ஆதரவையும், நாம் தமிழர் 3-6% ஆதரவையும் , மநீம+1-4% ஆதரவையும் பெற வாய்ப்பு உள்ளதாம்.

சிவி சண்முகம்

சிவி சண்முகம்

விழுப்புரம் தொகுதியில் அதிமுக (அமைச்சர் சிவி சண்முகம்)+ 43-49 ஆரவுடன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது, திமுக+ 42-48% 2 வது இடத்தை பிடிக்கும் என்றும் , அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6% ஆதரவுன் 3வது இடத்தை பிடிக்கின்றன. மநீம+2-5% ஆதரவுடன் 4வது இடத்தையும் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திண்டிவனம்

திண்டிவனம்

மயிலம் தொகுதியில் திமுக+ 45-51% ஆதரவை பெற்று முன்னிலையில் உள்ளது, அதிமுக+ 43-49% ஆதரவுடன் 2வது இடத்தையும், நாம் தமிழர் 3-6% ஆதரவையும் அமமுக +1-4% ஆதரவையும் பெற வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது. திண்டிவனம் தொகுதியில் அதிமுக+ 43-49%, திமுக+ 41-47%, அமமுக +5-8%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% ஆதரவை பெற வாய்ப்பு உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 4-8%, மநீம+1-4% ஆதரவை பெற வாய்ப்பு உள்ளது.

English summary
AIADMK is leading 7 constituencies in the race for victory in villupuram and kallakurichi district. dmk lead 4 constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X