அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச் செயலாளர்! திடீரென டோனை மாற்றிய எஸ்.பி.வேலுமணி! ட்விஸ்ட்டான யூடர்ன்!
சென்னை: அதிமுக எங்களின் உயிர் மூச்சு, அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச் செயலாளர் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீர் பல்டியாக இதை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், ஐயூஎம்எல், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார்.

தவெக பதவியேற்பதற்கு முன்பே அதிமுக இரண்டாக பிரிந்தது. சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அது போல் தவெகவின் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியும், இந்த 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு என அறிவித்ததுடன் தவெகவுக்கு ஆதரவையும் அளித்தனர்.
இதனால் தவெக அமைச்சரவையில் அதிமுகவுக்கு 5 இடங்கள் வரை கிடைக்கும் என தகவல்கள் கிடைத்தன. அதே நேரம் அதிமுக அமைச்சரவையில் வந்தால், தவெகவுக்கு ஆதரவு கொடுத்த விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்கள் என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
ஆனால் நேற்றைய தினம் அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. அப்போது காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றனர். அது போல் இன்று நடந்த பதவியேற்பிலும் அதிமுகவுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
இதனால் வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கல் ஏமாற்றமடைந்தனர். அது போல் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ அழைப்பும் அனுப்பப்படவில்லை.
இந்த நிலையில் வேலுமணி சி.வி.சண்முகம் தரப்பினர் நேற்று ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வேலுமணி கூறுகையில், "இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தேவையில்லை என்றுதான் நினைத்தோம்.
இருந்தாலும் கூட ஒரு சில பத்திரிகைகள் தொடர்ந்து நாங்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க போவதாக பேசி வருகிறார்கள், அதில் நாங்கள் ஏமாற்றமடைந்ததாகவும் சொல்கிறார்கள். நானோ சிவி.சண்முகமோ அமைச்சர்களாக உள்ளே போவதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை.
திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் தான் மக்களும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். நாங்களும் அதே திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்.
அதிமுகவில் பிளவு கிடையாது. எங்களுக்குள் இருக்கும் ஒரு கருத்து வேறுபாடுதான். இப்போதும் சொல்கிறேன், அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச் செயலாளர், அவரிடம்தான் தோல்வி குறித்த ஆய்வறிக்கையை வழங்குவோம். அதிமுகதான் எங்கள் உயிர் மூச்சு என வேலுமணி தெரிவித்துள்ளார்.
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications