10 நாள் கூட இல்லை.. அனல் பறக்கும் வேலூர்.. செம பிளானில் ரவுண்டு கட்டும் அதிமுக.. யோசனையில் திமுக
அதிமுக, திமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன
Recommended Video
சென்னை: இன்னும் 10 நாள் கூட தேர்தலுக்கு முழுசா இல்லை.. அதனால்தான் செம பிளானில் அதிமுக இறங்கி விட்டது!
5-ம் தேதி தேர்தல் என்பதால் உச்சக்கட்ட பிரச்சாரம் வேலூரில் நடந்து வருகிறது. நடப்பது ஒரு தொகுதி தேர்தல் என்றாலும், திமுக, அதிமுக, கட்சிகளுக்கு இந்த வெற்றி என்பது ஒரு தன்மான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
அதனால்தான் இரு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வேலூரில் முகாமிட்டு உள்ளனர். இதில் அதிமுக தரப்பு கொஞ்சம் வேகமாகவே செயல்படுகிறது.

முதலியார்
வேலூர் தொகுதியை பொறுத்தவரை ஓரளவு வன்னியர், ஓரளவு முதலியார் சமூகத்தினர் நிறைந்திருந்தாலும், தேர்தல் வெற்றியை எப்போதுமே தீர்மானிப்பது முஸ்லீம் வாக்குகள்தான். இந்த தொகுதியில் கிட்டத்தட்ட 3 லட்சம் முஸ்லீம் வாக்குகள் உள்ளன. இவர்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ, அவர்களே பிரதான வேட்பாளராக குத்து மதிப்பாக கணக்கிடப்படுகிறது.

முகம்மது ஜான்
அந்த வகையில், இஸ்லாமிய ஓட்டுக்களை அள்ள திமுக, அதிமுக தீவிர வேட்டையில் இறங்கி உள்ளது. ஏற்கனவே ஒரு முஸ்லீமுக்கு கூட சீட் தரப்படவில்லை என்று இந்த இருகட்சிகளின் மீதும் ஒரு அதிருப்தி உள்ளது. இதை உணர்ந்த அதிமுகவோ, இந்த தொகுதியை சேர்ந்த முகம்மது ஜானுக்கு ராஜ்ய சபாசீட் தந்து ஓரளவு அதிருப்தியில் இருந்து மீண்டு வருகிறது.

ஏசி சண்முகம்
அது மட்டும் இல்லை.. பிரச்சாரத்துக்கு போகிற இடங்களில் எல்லாம் முகம்மது ஜானுவையும் கூடவே அழைத்து செல்கிறார்களாம். ஏசி சண்முகம் வாக்கு சேகரிக்க, பக்கத்திலேயே முகம்மது ஜானுவையும் நிற்க வைத்து கொள்கிறார்கள்.

பாஜக
இதைதவிர இஸ்லாமிய பிரதிநிதிகளை ஏசி சண்முகம் நேரில் சந்தித்து தனிப்பட்ட முறையில் பேசியும் வருகிறார். அது மட்டுமில்லை... பிரச்சாரத்துக்கு வந்தால், ஏதாவது ஏடாகூடமாகி விடப்போகிறது என்று பாஜக தரப்பை கிட்டயே சேர்க்காமல் உஷாராக இருக்கிறதாம் அதிமுக தரப்பு! இப்படி இஸ்லாமிய வாக்குகளை கவர எத்தனையோ பிளான்களை போட்டு அதிமுக பட்டைய கிளப்பும் பட்சத்தில், இதற்கு மாற்றாக நாம் என்ன செய்யலாம் என்று திமுக தரப்பும் பலமாக யோசித்து வருகிறதாம்!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications