மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும்.. பாவம்! தவெகவை பங்கம் செய்த அதிமுக ஜெயக்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தவெகவை பயங்கரமாக கலாய்த்து ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக தமிழகத்தில் மக்கள் அல்லோலப்படும் நிலையில், எம்.எல்.ஏ வீட்டுக்கு சென்று கேட்டதாகவும், அப்போது எம்எல்ஏ ஊர்ல இல்லைன்னு ஒருத்தர் வந்து சொன்னதும் எல்லாரும் கலைஞ்சு போயிட்டாங்களாம்.. வெளிய வந்து சொல்லிட்டு போனவர்தான் எம்எல்ஏன்னு யாருக்கும் தெரியல பாவம், மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெக கடந்த 10 ஆம் தேதி ஆட்சி அமைத்தது. தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னை உள்பட நகரப் பகுதிகளிலும் மின்வெட்டு தொடர்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

Jayakumar Criticizes TVK over Power Cuts issue with sarcastic post

கலாய்த்து ட்வீட் போட்ட ஜெயக்குமார்

பல இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையும் காண முடிகிறது. மின் தட்டுப்பாடு இல்லை எனவும், பிரச்சனையை சீர் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். எனினும், மின் தடை தொடர்வதாக குற்றசாட்டு எழுந்து வரும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் தவெகவை விமர்சித்து கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார். ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- தொடர் மின்வெட்டுன்னு ஒரு கூட்டம் கிளம்பி எம்எல்ஏ வீட்டுக்கு போய் சவுண்ட கொடுத்துருக்காங்க.. அப்புறம் ஒருத்தர் வெளியே வந்து எம்எல்ஏ ஊர்ல இல்லைன்னதும் கலைஞ்சு போயிட்டாங்க..

மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தானே தெரியும்

வெளிய வந்து சொல்லிட்டு போனவர்தான் எம்எல்ஏன்னு யாருக்கும் தெரியல.. (மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும் பாவம்..)" என்று ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்றது. பல தொகுதிகளில் சிட்டிங் அமைச்சர்கள், விஐபி வேட்பாளர்களை முன்பின் தெரியாத அரசியலில் முதல் முறையாக தலைகாட்டிய இளம் வேட்பாளர்கள் வீழ்த்தினர். விஜய் என்ற ஒற்றை முகத்தை வைத்துக்கொண்டு, வேட்பாளர் பெயர் கூட தெரியாமல் பல தொகுதிகளில் தவெகவிற்கு மக்கள் வாக்களித்து இருப்பதை காண முடிந்தது.

வேட்பாளர் யார் என்று கூட தெரியாமல்..

இதுபோல அரசியல் அனுபவம் இல்லாதவர்களையும், வேட்பாளர் யார் என்றே தெரியாதவர்களுக்கும் வாக்களிப்பது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்று எதிர்க்கட்சிகள் குறை கூறியதையும் பார்க்க முடிந்தது. இந்த சூழலில்தான், தவெக வேட்பாளர் யார் என்று கூட தெரியாமல் வாக்களித்துவிட்டார்கள் என்பதை தனது பாணியில் கலாய்த்து டி ஜெயக்குமார் பதிவிட்டு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார், தவெக வேட்பாளர் விஜய் தாமுவிடம் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் விஜய் தாமு 59,901 வாக்குகள் பெற்றார். இரண்டாவது இடத்தில் திமுக வேட்பாளர் சுபைர் கான் 44,842 வாக்குகள் பெற்று இருந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 18,420 வாக்குகள் மட்டுமே டெபாசிட் இழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+