பாஜகவுக்கு செம டோஸ்... திரிசங்கு நிலையில் பாமக, தேமுதிக... கூட்டணி கட்சிகள் இல்லாமல் அதிமுக பிரசாரம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை கூட்டணி கட்சிகள் இல்லாமலேயே தொடங்கிவிட்டது அதிமுக. இதனால் அதிமுக அணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமைத்த கூட்டணியே தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் கூறியிருந்தார்.
ஆகையால் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை அங்கீகரிக்காமல் பாஜக தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவுடன் முட்டல் மோதல்
மேலும் பாஜக கேட்கிற 60 அல்லது 40 தொகுதிகளை தரமுடியாது என்பதிலும் அதிமுக உறுதியாக உள்ளது. இதனால் அதிமுக- பாஜக இடையேயான கூட்டணியில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் அதிமுகவின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது.

பாஜக மீது தாக்குதல்
இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பாஜகவை மறைமுகமாக வெளுத்து வாங்கிவிட்டனர். கேபி முனுசாமியின் பாஜக மீதான கடுமையான அட்டாக், அதிமுகவில் உள்ள பாஜக ஆதரவு நிலையில் உள்ள அமைச்சர்களையே உலுக்கி எடுத்துவிட்டது. இதற்கு பாஜக என்ன பதில் தரப் போகிறது என்பது எதிர்பார்ப்படுகிறது.

பாமக பங்கேற்கவில்லை
மற்றொரு கூட்டணி கட்சியான பாமகவும் இன்றைய பிரசார கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் நேராக சென்று டாக்டர் ராமதாஸை அழைத்திருந்தனர். ஆனால் இன்றைய கூட்டத்தில் பாமக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளதா? இல்லையா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குழப்பத்தில் அதிமுக
மேலும் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என சொல்லப்பட்ட தேமுதிக 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கிறது. இன்னொரு பக்கம் திமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறது தேமுதிக. அத்துடன் அதிமுகவை கடுமையாக தேமுதிக விமர்சிக்கவும் செய்கிறது. தற்போதைய நிலையில் பாஜக, பாமக, தேமுதிக இல்லாமல் அதிமுக தனித்தே பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. இதனால் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறப் போகிறது என்பது தெரியாத குழப்பத்தில் அக்கட்சி தொண்டர்கள் உள்ளனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications