அது என்ன குல விளக்கு திட்டம்.. இதுதான் இபிஎஸ் அன்று சொன்ன அறிவிப்பா? "சர்வதேச" வரவேற்பை வாக்குறுதி!
சென்னை: சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குல விளக்கு திட்டம் என்ற எ அதிரடி திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்று திட்டம் பல நாடுகளில் அமலில் இருக்கிறது. வறுமை கோட்டுக்கு கீழ் அதிக மக்கள் இருக்கும் நாடுகளில் இந்த திட்டம் அமலில் உள்ளது.
பிரேசில், பின்லாந்து போன்ற நாடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த திட்டம் மூலம் பல லட்சம் ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்டனர்
இது போன்ற திட்டத்தை கடந்த லோக்சபா தேர்தலின் போது காங்கிரசின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி அறிவித்து இருந்தார். அனைவருக்கும் அடிப்படை வருமானத்தை நாங்கள் கொடுப்போம். மக்களுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கே இந்த வருமானம் கொடுக்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்து இருந்தார் .

அறிவிப்பு
தற்போது இதே போன்ற அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குல விளக்கு திட்டம் என்ற அதிரடி திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும், உதவித்தொகையாக ரூ.1,500/- வழங்கப்படும்.

எப்படி
சர்வதேச அளவில் வரவேற்பை பெற்ற திட்டத்தை அதிமுகவும் கையில் எடுத்துள்ளது. அபிஜித் பானர்ஜி போன்ற பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள் கூட இந்த திட்டத்தை பாராட்டினார்கள். அதே போன்றதொரு திட்டத்தை முதல்வர் பழனிசாமி தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

திட்டம் என்ன
இந்த திட்டம் மூலம் பல இந்த தொகை குடும்பத் தலைவியின் வங்கி கணக்கிலும், ஆண்கள் மட்டுமே உள்ள குடும்பத்தில் உள்ள ஆண்களின் வங்கி கணக்கிலும் செலுத்தப்படும். மொத்தத்தில் எல்லோரின் குடும்பத்திற்கும் பணம் கொடுப்படும். அதாவது அடிப்படை வருமானம் போல இதுவும் ஒரு திட்டம்.

திமுக
இந்த திட்டத்தை முன்பு திமுகவும் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்று கூறினார். திமுக தங்கள் திட்டத்தை காப்பியடித்துவிட்டது என்று அதிமுக கூறி இருந்தது. மக்கள் நீதி மய்யமும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது .
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications