’யூத்’களை கவர் செய்யும் விஜய்..அதிமுகவில் சூடுபிடிக்கும் ஆட்டம்! சீட்டைக் கலைத்துப் போடும் எடப்பாடி!
சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே இடையில் இருக்கும் நிலையில் அதிமுகவை சீரமைக்க கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு கட்சியில் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒரு லட்சம் பேருக்கு பதவிகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இருந்தவரை அதிமுக ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி கட்சிகள் இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் அளவுக்கு அக்கட்சியை வலிமையாக வைத்திருந்தார்.

அவரது மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. முக்கிய நிர்வாகிகள் பலர் ஓரம் கட்டப்பட்டது, தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சீனியர்கள் போர்க் கொடி என பல பிரச்சினைகள் இருக்கிறது.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதற்கு பிறகு சந்தித்த ஆர்கே நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2003 ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்விகளையே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக சந்தித்தது.
அதே நேரத்தில் எதிர் அணியில் இருக்கும் திமுகவோ அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி பலத்துடன் வெற்றி வாகை சூடி இருக்கிறது. அதனால் 2026 சட்டசபை தேர்தலில் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை தோல்வியை சந்தித்தால் அதற்கு பிறகு கட்சியில் என்ன நடக்கும் என்பது அவருக்கே தெரியும். மேலும் நாம் தமிழர் கட்சி, விஜய் கட்சி ஆகியவற்றுக்கு அதிமுகவினர் தாவாமல் இருப்பதற்காகவும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அவர் வகுத்திருக்கிறார்.
தற்போது கட்சியில் சுமார் 2 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஒன்றரை லட்சம் நிர்வாகிகள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதை அடுத்து ஊராட்சியில் அனைத்து கிளை வார்டுகள், கட்சிக்கான வட்டச் செயலாளர், அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை தவிர்த்து 38 அதிமுக மாவட்டங்களில் ஒரு லட்சம் பதவிகளை உருவாக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார்.
கிளை, பேரூர், ஒன்றியம், நகரம், பகுதி, மாவட்ட நிர்வாகிகள் பதவிகளை தவிர மாணவர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, அம்மா பேரவை, எம்ஜிஆர் மன்றம் உள்ளிட்ட அணிகளுக்கும் ஊராட்சி அளவில் பதவி வழங்கப்பட இருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதலாக சில அணிகளை உருவாக்கி அவற்றுக்கும் நிர்வாகிகள் நியமிக்க திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தாக்கம் காரணமாக திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் அந்த கட்சியின் பக்கம் சாய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இளைஞர் பட்டாளம் அதிமுகவுக்கு தேவை. இதன் காரணமாகவே புதிய பதவிகளை வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஏற்கனவே கட்சியில் இருக்கும் சீனியர்களின் வாரிசுகளுக்கும் பழைய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களது குடும்பத்தினருக்கும் பதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
சத்தமில்லாமல் முடிந்த சாவி விவகாரம்! CV சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமாக தூக்கிய எடப்பாடி.. பிளான் என்ன -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications