அதிமுகவில் அடுத்த விக்கெட்.. திமுகவில் இணைந்த மாஜி எம்பி மைத்ரேயன்! ஒரே மாதத்தில் 3 பேர் தாவல்
சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்பியுமான மைத்ரேயன் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இணைந்துள்ளார். ஒரே மாதத்தில் அதிமுகவில் இருந்து திமுகவில் 3 பேர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என தமிழ்நாடு முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருக்கும் நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பாஜக கூட்டணியால் கட்சியில் உள்ள சில சீனியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியால் வலுவாக இருந்த தொகுதிகளில் கூட பல முன்னாள் அமைச்சர்கள் தோல்வியை சந்தித்தனர். இதை அடுத்து அதிருப்தியில் இருக்கும் அவர்கள் வேறு கட்சிகளுக்கு தாவ திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சரும் சிறுபான்மை தலைவர்களில் முக்கியமானவருமான அன்வர் ராஜா மிகுந்த அதிருப்தியில் இருந்தார்.
அன்வர் ராஜா
மேலும் சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என வெளிப்படையாகவே பேசி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவரான ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த சில தினங்களிலேயே அவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவில் அடுத்த விக்கெட் விழுந்து இருக்கிறார். திமுகவுக்கு சென்ற அன்வர் ராஜா அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை தொடர்பு கொண்டு கட்சியில் மரியாதை இல்லை என்றால் திமுகவுக்கு வாருங்கள் உங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என சொன்னதாக சொல்லப்படுகிறது.
முன்னாள் எம்பி மைத்ரேயன்
இந்த நிலையில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் மைத்ரேயன். இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அவரை பொன்னாடை போர்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அவருடன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். தற்போது 69 வயதாகும் மைத்ரேயன் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்ததால்தான் அவரை டெல்லி அரசியலை கவனித்துக் கொள்ள மாநிலங்களவை எம்பி ஆக்கினார் ஜெயலலிதா.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்ந்த மைத்ரேயன் கட்சியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் தற்போது அவர் திமுகவில் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது. மைத்ரேயன் மட்டுமல்லாது வரும் காலங்களில் மேலும் சில அதிமுக புள்ளிகளும் திமுகவில் இணையலாம் என சொல்லப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், வேலூரைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் மற்றும் இரு பெண் முன்னாள் அமைச்சர்கள் என பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு முன்னோட்டமாகவே அன்வர் ராஜாவும், மைத்ரேயனும் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள் என்கின்றனர் திமுகவினர். மேலும் புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமானும் திமுகவில் இணைந்த நிலையில், ஒரே மாதத்தில் அதிமுகவில் இருந்து திமுகவில் 3 பேர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications