விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் 297 வாக்குறுதிகளில் அந்த வாக்குறுதி இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவும், மே 4ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன. இத்தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட தேர்தல் அறிக்கைகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

AIADMK Manifesto

கடந்த 2021ல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோது, 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை சுமார் ரூ. 6,000 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்தது. இம்முறையும் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இரு திராவிடக் கட்சிகளும் நகைக்கடன் தள்ளுபடியை அறிவித்தால், யார் ஆட்சிக்கு வந்தாலும் சலுகை உறுதி என்பதால் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். எனினும், இதற்கு நிபந்தனைகள் உள்ளன.

குடும்ப அட்டைக்கு 5 சவரன் (40 கிராம்) அல்லது அதற்குக் குறைவாக அடகு வைத்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள். தள்ளுபடி தொடக்க வேளாண், மத்திய, நகரக் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். சரியான ரேஷன் அட்டை, ஆதார் விவர இணைப்பு கட்டாயம்.

ஒரு குடும்பத்தின் மொத்த நகைக்கடன் அளவு 5 சவரனுக்குள் இருக்க வேண்டும். வெவ்வேறு வங்கிகளில் பெற்றாலும், மொத்தம் 5 சவரனைத் தாண்டினால் தள்ளுபடி கிடைக்காது.

இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானது. அதில் 297 வாக்குறுதிகளை அதிமுக கொடுத்திருந்தது. அவற்றில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு இல்லை.

ஆனால் மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது போல் வங்கிகளில் மாணவர்கள், பெற்றோர் நலன் காக்கும் பொருட்டு வங்கிகளில் கல்விக் கடன் பெற்று, வேலைவாய்ப்பு கிடைக்காமல் கடன் தவணையை செலுத்த முடியாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில் அத்தொகையை அரசே ஏற்கும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+