மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி
சென்னை: வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன் வழங்கப்படும். வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என மொத்தம் 297 அறிவிப்புகளை எடப்பாடி வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இந்த தேர்தல் அறிக்கையில், பொது மக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில் அதிமுக சார்பில் ஏற்கனவே 3 கட்டமாக வாக்குறுதிகளை அறிவித்து இருந்த நிலையில் இன்று மொத்தமாக 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது:- ஏற்கனவே 3 கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளோம். அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். கொரோனா காலத்தில் வருவாயே இல்லாத நேரத்தில் கூட திறம்பட பல்வேறு திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்" என்று கூறினார்.
* தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை.
* மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
* நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச ப்ரிட்ஜ் (குளிர்சாதனப் பெட்டி) வழங்கப்படும்.
* முதியோர் உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
* அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் இலவசம்.
* வீடற்ற குடும்பங்களுக்கு அம்மா இலவச வீடு திட்டத்தின் கீழ் இலவச கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்.
* மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.
* 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
* வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழஙக்ப்படும்.
* காட்சி ஊடகவியளாலர்களுக்கு ஓய்வூதிய
* இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன் வழங்கப்படும்.
* வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.
* கொத்தடிமை இல்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.
* ஜெயலலிதாவின் கனவு திட்டமான கச்சத் தீவை மீட்பதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
* மதம் மாறினாலும் பட்டியலின மக்களுக்கான சலுகை தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications