இபிஎஸ் தலைமையில் கூட்டம்..அதிமுக நிர்வாகிகளுக்கு சிக்கல்..ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு
காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை வட கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது நாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வடசென்னை வடக்கு-கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை தண்டையார்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார்.

எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
முக்கிய விருந்தினராக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு நடைபெற்ற இந்த பொதுக்கூட்டம் அக்கட்சியின் பிற மாவட்டத்தினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

திமுகவை விமர்சித்து பேசிய எடப்பாடி
விழாவில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமி, மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 7,575 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து விழாவில் பேசிய எடப்படி பழனிசாமி மிகக் கடுமையாக திமுகவை விமர்சித்து பேசினார். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருந்த போது இடை இடையே அங்கு வைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் திரையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்பு பேட்டியளித்த, பேசிய காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

அனுமதி கேட்கப்பட்டதா?
இதேபோல், விலைவாசி உயர்வு குறித்து மக்கள் கருத்து, அமைச்சர்களின் செயல்பாடு ஆகியவையும் ஒளிபரப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜாமீனில் வெளிவர முடியாத..
ஆனால் காவல்துறையினர் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியது, விளம்பர பதாகைகள் வைத்தது, எல்.இ.டி திரைகள் வைத்தது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பொய் செய்திகளை ஒளிபரப்பியது என பல்வேறு புகார்களை திமுகவின் 42-வது வட்ட செயலாளர் காவல்துறையில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தண்டையார் பேட்டை போலீசார், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ், பகுதி செயலாளர் சினிவாச பாலாஜி, 42-வது வட்ட செயலாளர் எஸ்.ஆர் பாபு உள்பட அதிமுக நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 10 வழக்குகள் பதிவு
இந்திய தண்டனை சட்டம் 143, 290, 285, 336, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுவது, வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட சென்னை அதிமுக நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications