சட்டசபையில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய அதிமுகவினர்! சபாநாயகர் கொடுத்த ரியாக்சன்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை பேச்சை நிறுத்தி அமருமாறு சபாநாயகர் கூறினார். அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் வானதி சீனிவாசனை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். இதற்கு சபாநாயகர் அப்பாவு என்ன அதிமுக பக்கம் இருந்து சத்தம் வருகிறது என்று கூறியதும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது முதல்வர் ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110-ன் கீழ் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை தொடர்ந்து சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

அப்போது தமிழக சட்டசபையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பினர். வானதி சீனிவாசனை பேச அனுமதிக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பினர்.
மானிய கோரிக்கை விவாதத்தின் போது வானதி சீனிவாசனுக்கு 10 நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 10 நிமிடம் பேசிய நிலையில் அவரை பேச்சை நிறுத்திக் கொள்ளுமாறு சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார். அப்போது அதிமுக எம் எல் ஏக்கள் சபாநாயகரிடம், வானதி சீனிவாசனை பேச அனுமதிக்குமாறு கூறினர். இதை கேட்டதும் சபாநாயகர் அப்பாவு, " என்ன அதிமுக பக்கம் இருந்து சத்தம் வருகிறதே" என்று கூறினார்.
அப்போது சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. உடனே வானதி சீனிவாசன் எழுந்து பேசினார். அவர் கூறுகையில், "அமைச்சர்களுக்காக பேரவைத் தலைவராக இருக்கக் கூடிய சபாநாயகர் பேசும் போது, எனக்காக அதிமுகவினர் பேசக்கூடாதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கும் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications