ஸ்டாலின் எடுத்த "பெரிய விக்கெட்".. ஆஹா அந்த 3 பேரில் இவர்தான் முதல் அவுட்டா? விக்கித்த அதிமுக! நிஜமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் மு. ஸ்டாலின் மருத்துவத்துறையை சிறப்பாக நடத்துகிறார் என்று சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கந்தசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் திமுக பக்கம் தாவ போவதாக கடந்த சில நாட்களாவே அரசியல் வட்டாரத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது. 3 எம்எல்ஏக்கள் வரை அதிமுகவில் இருந்து சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

அதாவது கட்சி மாறாமல் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு மட்டும் தெரிவிப்பார்கள். அதிகாரபூர்வமற்ற முறையில் இவர்கள் திமுக எம்எல்ஏக்களாக செயல்படுவார்கள் என்று தகவல்கள் வந்தன.

ஸ்டாலின்

ஸ்டாலின்

அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்கள் கடுமையான அப்செட்டில் இருக்கிறார்கள். கட்சியில் இருந்தால் எதிர்காலம் இருக்காது. இப்படி அணி அணியாக பிரிந்து கிடந்தால் இரட்டை இலை சின்னம் கூட முடங்கும். அதனால் இப்போதே பாதுகாப்பான கப்பலுக்கு தாவி விடுவோம் என்று மூழ்கும் டைட்டானிக்கில் இருந்து லைப் போட்டிற்கு தாவும் பயணிகள் போல முக்கிய அதிமுக தலைகள் அணி மாற தயாராக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே சிலர் திமுக பக்கம் ஜம்ப் அடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

அதிமுக

அதிமுக

பெரும்பாலும் கொங்கு மண்டலத்தில்தான் இப்படி அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவிற்கு தாவ போகிறார்கள் என்று கணிப்புகள் தெரிவித்தன. எம்பி செந்தில் குமார் கூட இது தொடர்பாக இரட்டை இலை எமோஜி வைத்து குறிப்பாக ட்வீ ட் ஒன்றை போட்டு இருந்தார். அதன்படி 3 எம்எல்ஏக்கள் விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. கோவையை சேர்ந்த 10 அதிமுக எம்எல்ஏக்களில் 3 பேர் முதல்வர் ஸ்டாலினை பார்த்து திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று பல்வேறு தகவல்கள் வந்தன. இந்த நிலையில் தற்போது சூலூர் தொகுதி எம்எல்ஏ முதல்வர் ஸ்டாலினை பாராட்டி உள்ளார்.

சூலூர்

சூலூர்

நேற்று சூலூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பேசிய எம்எல்ஏ கந்தசாமி, உலக அளவில் டெங்கு பரவி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மருத்துவ துறை சிறப்பாக முக்கியத்துவம் கொடுத்தது. அதேபோல் தற்போது முதல்வரும் மருத்துவ துறை மீது கவனம் செலுத்தி வருகிறார். முதல்வர் மு. ஸ்டாலின் மருத்துவத்துறையை சிறப்பாக நடத்துகிறார். ஜெயலிலதா, கருணாநிதி போல அவர் சிறப்பாக செயல்படுகிறார், என்று சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கந்தசாமி தெரிவித்துள்ளார்.

என்னாச்சு?

என்னாச்சு?

திடீரென இவர் இப்படி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசிய சம்பவம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேடையிலேயே இவர் முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன அதிமுக விக்கெட் விழுந்துடுச்சோ என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆனால் முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் திமுக பக்கம் செல்ல போவதாக எழுந்த சர்ச்சைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார். அதில், அதிமுக எம்எல்ஏக்கள் அணி மாற மாட்டார்கள்.

எம்எல்ஏக்கள்

எம்எல்ஏக்கள்

திமுகவின் எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மொத்தம் 10 திராவிட முன்னேற்ற கழக எம்எல்ஏக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலரிடமும், அறிவாலயம் தரப்பிடமும் எடப்பாடி இப்படி சொல்கிறாரே என்று விசாரித்தோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+