Exclusive: அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பாஜகவுக்கு தாவப் போவதாக தீயாய் பரவிய தகவல்.. அதிரடி மறுப்பு
சென்னை: அதிமுக எம்எல்ஏவும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜன் செல்லப்பா பாஜகவில் இணையப் போவதாக திடீரென தகவல் பரவி இருப்பது அதிமுகவில் புயலை கிளப்பி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜகவில் தான் இணைய போவதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்திருக்கிறார் ராஜன் செல்லப்பா..
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த நிலையில், அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு நடந்த தேர்தல்களில் கூட்டணி மாறுதல்கள் இருந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி முடிவுக்கு வந்தது. இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என அதிமுக தலைவர்கள் திட்டவட்டமாக கூறிவந்தனர்.

இந்த நிலையில் திடீரென அரசியல் களம் மாறி இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக அவர் கூறினாலும் பாஜக முக்கிய தலைவர்களை அவர் சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மதுரை அதிமுகவின் முக்கிய முகமாக இருப்பவரும் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அரசியல் செய்து வருபவருமான ராஜன் செல்லப்பா பாஜகவில் இணையப் போவதாக தகவல் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமையலாம் என கூறப்படும் நிலையில் திடீரென இந்த தகவல் வெளியாகி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் இருந்து சில புள்ளிகள் விலகினாலும் பாஜகவில் நேரடியாக இணையவில்லை. ஓபிஎஸ், டிடிவி போன்றவர்கள் கூட்டணி அமைத்து ஆதரவாளர்களாக இருக்கின்றனர். ஆனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முன்னதாகவே அதிமுகவில் பயணித்து வரும் ராஜன் செல்லப்பா பாஜகவில் இணையப் போவதாக திடீர் தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக அவரிடமே ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேசிய போது அந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்" அதிமுகவில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவுடன் ஒரு கூட்டணிக் கட்சி என்ற வகையிலேயே கடந்த காலங்களில் பாஜகவுடன் உறவு இருந்தது. தற்போது அதுவும் இல்லை. அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.
தேவையில்லாமல் திட்டமிட்டு இதுபோன்று பரப்பப்படுகிறது. சிறிது நேரத்திற்கு முன்புதான் சட்டமன்றத்தில் இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசி வந்திருக்கிறேன். யார் இது போன்ற தகவல்களை பரப்புகிறார்கள் என தெரியவில்லை" என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
யார் இந்த ராஜன் செல்லப்பா?: அதிமுகவின் மதுரை மாவட்ட செயலாளர்களில் ஒருவராகத்தான் ராஜன் செல்லப்பாவை இப்போது இருக்கும் தலைமுறைக்கு தெரியும். ஆனால் மாணவப் பருவத்தில் இருந்தே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர் ராஜன் செல்லப்பா என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி காலத்தில் திராவிட மாணவ முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக இருந்தவர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். மாணவர் அணி செயலாளராகவும் இருந்திருக்கிறார்.
எம்ஜிஆரின் தீவிர விசுவாசியான அவர் எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது அவரது வீட்டின் முன் மாணவர்களோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு எம்ஜிஆர்-ஐ கட்சி ஆரம்பிக்க வைத்தவர்களில் ஒருவர். அதிமுக தொடங்கப்பட்ட பிறகு மதுரை மாவட்ட மாணவர் அணி செயலாளராக இருந்திருக்கிறார். தொடர்ந்து அதிமுக ஜெ, ஜா என இரு அணிகளாக பிறந்த போது ஜெ அணி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டவர்.
தொடர்ந்து மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர், மாநில இளைஞரணி செயலாளர், ராஜ்யசபா உறுப்பினர், மதுரை மேயர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர், மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ, 2021ல் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ என பல பதவிகளை வகித்தவர், வகித்து வருபவர் தென் மாவட்டங்களில் இப்போது ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு என பலர் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் முன்பே மதுரையின் அதிமுக முகம் என்றால் ராஜன் செல்லப்பா தான். அவர் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தபோதுதான் பெரியகுளம் நகராட்சி தலைவராக ஓபிஎஸ்ஐ உருவாக்கியவர் என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்த நிலையில் பாஜகவுக்கு செல்வார் என்ற தகவல் திட்டமிட்டு உளவுத்துறை பரப்பும் வதந்தி என உறுதியாக சொல்கின்றனர் மதுரை அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி











Click it and Unblock the Notifications