தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: "காது குத்தும் விழா" அழைப்பிதழுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்!
சென்னை: தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலையொட்டி "காது குத்தும் விழா" அழைப்பிதழுடன் அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்னும் சற்று நேரத்தில் கூட போகிறது. இதில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2026- 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசு அமைந்ததுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில் சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் வருதை தந்தனர். அவர்களின் கையில் ஒரு அழைப்பிதழ் உள்ளது.

அதில் "காது குத்தும் விழா" என குறிப்பிட்டிருந்தது. பட்ஜெட் என்ற பெயரில் தமிழக மக்களுக்கு காது குத்தும் விழா என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அந்த அழைப்பிதழில் "கூவம் சுத்திகரிப்பு, மழைநீர் வடிகால், சிங்கார சென்னை போன்ற திட்டங்களுக்கு விதவிதமாக காது குத்தப்படும்.
சொத்து வரி, மின்கட்டணம் என பல்வேறு முறைகளில் மொய் வைக்கலாம்" என்ற அழைப்பிதழுடன் அவைக்கு வந்திருக்கிறார்கள். மேலும் அந்த அழைப்பிதழில் "காது குத்து விழாவுக்கு தலைமை தாங்குபவர் தமிழக முதல்வர் ஸ்டாலின், காது குத்துபவர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இடம் சட்டசபை வளாகம், நேரம் : காலை 10 மணி" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அழைப்பிதழில், "கடந்த 4.5 ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக காது குத்தும் விழா" என குறிப்பிட்டிருந்தனர். 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி திமுக அரசு பதவியேற்றது. இந்த நிலையில் இந்த ஆட்சியில் கடைசி கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications