சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ பதவி பறிபோகிறது.. எடப்பாடி அரசுக்கு ஆபத்தா?

Google Oneindia Tamil News

சென்னை: ஒசூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி பறிபோயுள்ளதால், தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாகியுள்ளன. இதனால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அதிமுக 115 தொகுதிகளை வென்றது. இதையடுத்து 88 தொகுதிகளை வென்ற திமுக 2வது பெரிய கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளை வென்றது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியிலும், சுயேச்சை ஒரு தொகுதியிலும் வென்றனர்.

தகுதி நீக்கம்

தகுதி நீக்கம்

இந்த நிலையில்தான், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக செயல்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ போஸ், மற்றும் திருவாரூர் சட்டசபை தொகுதியில் திமுக உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் மரணமடைந்தனர். இதனால், காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 20ஆக அதிகரித்தது.

அதிமுக பலம்

அதிமுக பலம்

இதன் காரணமாக, மொத்த சட்டசபையின் பலம் 214 என்ற அளவுக்கு சரிவடைந்தது. இதில் பாதிக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பலம் இருந்தால், அரசு காப்பாற்றப்படும். அதாவது 108 உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்கு தேவை. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதை வைத்து பார்த்தால் 102 எம்எல்ஏக்கள் பலம்தான் அதிமுக அரசுக்கு உள்ளதாக கூறப்பட்டது.

பெரும்பான்மைக்கு சிக்கல்

பெரும்பான்மைக்கு சிக்கல்

பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ பதவியை இழந்துள்ள நிலையில், சட்டசபை பலம் 213ஆக குறைந்துள்ளது. இதில் பாதிக்கும் மேல்.. அதாவது 107 எம்எல்ஏக்கள் பலம் தேவை. பாலகிருஷ்ண ரெட்டியும் பதவி பறிகொடுத்துள்ள நிலையில், அரசுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் பலம் 101 என்ற அளவில் சரிந்துள்ளது. அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் ஒருவேளை, அரசுக்கு ஆதரவு அளித்தாலும் கூட, பெரும்பான்மை பலம் பெற முடியாது.

நம்பிக்கையில்லா தீர்மானம்?

நம்பிக்கையில்லா தீர்மானம்?

இப்படியான சூழலில், எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமா, அல்லது இடைத் தேர்தலுக்காக காத்திருக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது. அதேநேரம், அரசு தரப்பில் விசாரித்தபோது, தங்களுக்கு போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

English summary
In the 234-member Assembly, the AIADMK has 115 members followed by the DMK with 88, Congress eight, one of the IUML, one independent, the speaker and 20 vacant seats (18 disqualified and two dead).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X