சென்னை மெரினா கடலில் கருணாநிதி பேனா சின்னம்- உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!
சென்னை: சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி காலமானார். அவருக்கு சென்னை மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்க ஆளும் திமுக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை மெரினா அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் கருணாநிதி நினைவிடம் கட்டப்படும். அதனுடன் இணைந்ததாக சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும். இதற்காக ரூ81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கருணாநிதி பேனா நினைவு சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, எதிர்ப்பை மீறி பேனா சின்னம் அமைத்தால் உடைப்பேன் என்றார். தொடர்ந்து இதே கருத்தை சீமான் கூறி வருகிறார். அண்மையில் மத்திய அரசு 15 நிபந்தனைகள் விதித்து சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் கருணாநிதி பேனா நினைவு சின்னத்தை சென்னை மெரினா கடலில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். ஏற்கனவே மீனவர்கள் சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications