அதிமுக எம்.பி. சிவி சண்முகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பியுமான சிவி சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பியுமான சிவி சண்முகத்திற்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக இரவு 8.45 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டார். இதய சிகிச்சை சம்பந்தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவி சண்முகத்திற்கு விரிவான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவி சண்முகம் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. எனினும் இதை சிவி சண்முகம் மறுத்தார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றதாக கூறினார்.
இந்த நிலையில், தான் நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிவி சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவி சண்முகம் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications