"அம்மா" ஆட்சி நடப்பதா சொல்றாங்க.. டாஸ்மாக்கை மூட சொன்னால்.. புதுசா திறக்கிறாங்களே.. மக்கள் புலம்பல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அம்மா"வின் ஆட்சி நடப்பதா சொல்றாங்க.. இருக்கிற டாஸ்மாக் கடையை மூட சொன்னால், புதுசா திறக்க ஆரம்பிச்சிட்டாங்களே" என்று மக்கள் நொந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

Recommended Video

    Tasmac இல்லைனா Tamilnadu-க்கு வருமானம் இல்ல - Mohan Kumaramangalam | Oneindia Tamil

    ஒருவழியாக தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு முன்பே, டாஸ்மாக் கடையை அரசு திறந்துவிட்டது.. யாருமே இப்படி கோரிக்கை வைக்காத நேரத்தில், தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியதுடன், அதற்கான அனுமதியையும் பெறுவதற்காக கோர்ட் வரைக்கும் படியேறியது.

    "இப்போ யார் கேட்டாங்க டாஸ்மாக்.. ஐயா தயவு செய்து கடையை தொறந்துடாதீங்க." என்று பல தாய்மார்கள் கொரோனா உச்சத்தில் இருந்த சமயம், கண்ணீர் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் துணிச்சலாகவே வெளியிட்டனர்... ஆனால், ஒருங்கிணைந்து நடத்தக்கூடிய போர் என்று அரசு சொல்லி வந்த நிலையில், மதுக்கடைகளை திறந்துவிட்டது அரசின் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

     யதார்த்தம்

    யதார்த்தம்

    கஜானா காலி என்பதால்தான் கடைகளை திறக்க முடிவு என்று யதார்த்தத்தை மக்களும் நன்றாகவே உணர்ந்தனர் என்றாலும், வருமானத்துக்கு எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன.. அதற்கான சில ஐடியாக்களைகூட டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே பலமுறை சொல்லியும் உள்ளார்.. அவைகளை அரசு பின்பற்றியிருக்கலாம்.

     எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள்

    அதுமட்டுமல்ல, அன்று மதுக்கடை திறப்பு விஷயத்தில் எதிர்க்கட்சிகள் போதுமான அழுத்தத்தை தரவில்லை என்பதே உண்மை.. ஆளுக்கு ஒரு அறிக்கை, பேருக்கு ஒரு கண்டனம் என்று இருந்ததே தவிர, யாருமே கொதித்தெழவில்லை.. இந்நேரம் ஆவேசம் வந்து பொங்கியிருந்திருக்க வேண்டும்.. உண்மையை சொல்ல போனால், மக்கள் நீதி மய்யம் எடுத்த முயற்சியை கூட அப்போது பிரதான கட்சிகள் யாரும் எடுக்கவில்லை..

     ஸ்கூல்கள்

    ஸ்கூல்கள்

    பெண்கள் ஊருக்கு ஊர், இந்த டாஸ்மாக்கை மூட சொல்லி பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், புதிதாக டாஸ்மாக்கை திறந்து வருவது மேலும் கொதிப்பை தந்து வருகிறது.. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே குன்னியூர் கிராமத்தில்தான் கடை திறக்கப்பட்டுள்ளது.. இங்கு நிறைய ஸ்கூல்களும், வழிபாட்டுத்தலங்களம் உள்ள நிலையில், புதிய கடையை திறக்க முயற்சி நடந்தபோதே, எதிர்ப்பும் மக்களிடம் இருந்து கிளம்பி உள்ளது. ஆனாலும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு, கடந்த 21-ம் தேதி புத்தம் புது கடை திறக்கப்பட்டுள்ளது.

     டாஸ்மாக் கடைகள்

    டாஸ்மாக் கடைகள்

    இதற்குதான் அந்த பகுதி மக்கள் ஆவேசமாகி உள்ளனர்.. "ஏற்கனவே கையில் காசு இல்லாம தவிச்சிக்கிட்டு இருக்கோம்... இப்போதான் கூலி வேலைகளுக்கு போக ஆரம்பிச்சிருக்கோம்.. எதை பத்தியும் கவலைப்படாம, டாஸ்மாக் கடையை புதுசா திறக்க அரசுக்கு எப்படித்தான் மனசு வருதோ? இதை திருவாரூர் கலெக்டர்தான் எப்படியாவது அகற்ற நடவடிக்கை எடுக்கணும்" என்கின்றனர்.

     கோரிக்கை

    கோரிக்கை

    அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உசிலம்பட்டி என்ற கிராமத்திலும் புது டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறதாம்.. இந்த டாஸ்டாக்கை திறந்தால், நிச்சயம் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.. மது விலக்கை அமல்படுத்த சொல்லி நிறைய போராட்டம் நடந்த இடம் இது.. தியாகி சசி பெருமாள் இதுக்காகவே உயிர் தியாகமும் செய்தார்.. இனி புதிய டாஸ்மாக்கை திறக்காதீங்க" என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    இந்த டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என்று 2016-லேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.. ஆட்சிக்கு வந்த பிறகும்கூட இந்த உறுதிமொழியை அவர் தந்திருந்தார்.. அதேபோல, எடப்பாடியாரும் அதே வாக்குறுதியை சொல்லியபடியே வந்தாலும், இன்னும் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை.

     அம்மாவின் ஆட்சி

    அம்மாவின் ஆட்சி

    மாறாக புதிய கடைகளை திறந்து வைத்து வருவது மக்களிடம் அதிர்ச்சியைதான் உண்டு பண்ணி வருகிறது... அதுவும் தொற்று காலத்தில் இது மேலும் அபாயத்தை உண்டு பண்ணும் என்பதே அனைவரின் கருத்தும்.. இது அம்மாவின் ஆட்சி என்கிறார்கள்.. வேறு ஆட்சியாக இருந்தால் கூட பரவாயில்லை... அம்மாவின் ஆட்சி என்று அத்தனை பேரும் போற்றும் இந்த ஆட்சி, நிச்சயம் இதை யோசித்து பார்க்க வேண்டும் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+