Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது விவாதமாகி இருக்கிறது. குறிப்பாக முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் சரோஜா மற்றும் ராஜலட்சுமி ஆகியோரின் பெயர்களும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, தற்போது 127 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக நேரடியாக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

AIADMK

அதேபோல் கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதில் இன்னும் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டும் அதிமுக அறிவிக்கவில்லை. குறிப்பாக சென்னையில் உள்ள 12 தொகுதிகளில் மட்டும் அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. இந்த 150 வேட்பாளர்களில் ஒரேயொருவர் மட்டுமே இஸ்லாமியர்.

அதேபோல் 17 பெண்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 17 பெண்களில் 11 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் பலரின் பெயர்களும் இடம்பெறவில்லை. குறிப்பாக முன்னாள் சபாநாயகர் தனபாலின் பெயர் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலிலும் இடம்பெறவில்லை.

அவர் தொடர்ந்து போட்டியிட்டு வென்ற அவிநாசி தொகுதியும் பாஜக வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலித் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான ராஜலட்சுமி, முன்னாள் அமைச்சர் சரோஜா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் 2021 தேர்தலில் தோல்வியடைந்த பல்வேறு முன்னாள் அமைச்சர்களுக்கும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு அளித்துள்ளார்.

ஆனால் தலித் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சீனியர் நிர்வாகிகளுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. மற்ற சமூக அமைச்சர்கள் தங்கள் மாவட்டத்தில் ஒரு கட்டமைப்பை உருவாக்க வாய்ப்பு கொடுக்கும் அதிமுக, தலித் சமூக முன்னாள் அமைச்சருக்கு மட்டும் வாய்ப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+