Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ADMK Office:அதிமுக அலுவலகம் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக அலுவலகம்: அதிமுக தலைமை அலுவலகம் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலினை அகற்றி சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தனது கட்சி தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்க கூடாது எனவும் அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த இரு வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் வாதிட்டனர்.

வீடியோ ஆதாரங்கள்

வீடியோ ஆதாரங்கள்

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சீல் வைத்த உத்தரவை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் தரப்பில், எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என பதிலளித்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி காலை முதல் நடந்த சம்பவங்களை வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை 15 ஆம் தேதிக்கு தேதிக்கு ஒத்திவைத்தார்.

காவல்துறை அறிக்கை

காவல்துறை அறிக்கை

அதன்படி கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் பொது அமைதி, பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியமாக கருதப்படுகிறது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் சீல் வைக்கப்பட்டது. போலீசார் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்திற்கு பின்னர் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கும் சொந்தம் என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என்று நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன.

 சமாதானம் ஏற்படவில்லை

சமாதானம் ஏற்படவில்லை


இன்னமும் இரு தரப்பினர் இடையே எந்த சமாதானமும் ஏற்படவில்லை. அப்படி இருக்கும்போது சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மீண்டும் பிரச்சனை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ராயப்பேட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரைக்கும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்த அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடுசீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ, சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் எனவும் குறிப்பிடப்பட்டது.

இபிஎஸ் தரப்பு வாதம்

இபிஎஸ் தரப்பு வாதம்

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சம்பவ இடத்தில் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு வீரர்களை தவிர வேறு எந்த போலீசாரும் இல்லை எனவும், என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களே போதுமானது எனவும் தெரிவித்தார். கட்சி அலுவலகம் அவருக்கு சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மூத்த வழக்கறிஞர், சம்பவம் நடந்த தேதியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை பன்னீர்செல்வம் தனது மனுவில் ஒப்புக் கொண்டுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

ஓபிஎஸ் தரப்பு வாதம்

ஓபிஎஸ் தரப்பு வாதம்

பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கட்சியில் தனது பதவி என்ன என்பதை கட்சி அலுவலக உரிமை தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது எனவும், பெரும்பான்மையான பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மட்டுமே தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதாக கருத முடியாது என்றும் குறிப்பிட்டார்.

யாருக்கும் உரிமையில்லை

யாருக்கும் உரிமையில்லை

கட்சி அலுவலகத்தின் உரிமை யாருக்கு என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் எனவும், கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் ஆர்.டி.ஓ பார்க்க வேண்டுமே தவிர யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்க முடியாது. இரு தரப்பினருக்கும் இடையே உள்ள சர்ச்சையை நீதிமன்றத்தால் மட்டுமே தீர்க்க வேண்டும் என்பதால், அதுவரை அலுவலகத்தை மூடி வைத்திருக்கலாம் என்றும் பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.

ஒ.பன்னீர் செல்வம்

ஒ.பன்னீர் செல்வம்

பொதுக்குழு நடக்கும் போது மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வருவர் என்பதால், கட்சி அலுவலகத்தை பூட்டி வைக்கும் பழக்கம் இல்லை எனவும், அப்படி தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றதாகவும், ஆனால் பழனிச்சாமி தரப்பின் நான்கு மாவட்ட செயலாளர்கள் வெளியில் அமர்ந்து கொண்டு உள்ளே நுழைவதை தடுத்ததாகவும் பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.

 ஹைகோர்ட் உத்தரவு

ஹைகோர்ட் உத்தரவு

கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை எனத் தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், பொதுக்குழுவுக்கு அனுமதியளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

 எடப்பாடி பழனிச்சாமியிடம் சாவி

எடப்பாடி பழனிச்சாமியிடம் சாவி

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலினை அகற்றி சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தனது கட்சி தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்க கூடாது எனவும் அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி சதீஷ்குமார் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். நீதிபதி உத்தரவினை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி வீட்டு வாசல் முன்பு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+