அமித் ஷாவை பார்த்த 2 நாளில்.. ஒரே பிளைட்டில் ஒன்றாக வர வேண்டிய எடப்பாடி - ஓபிஎஸ்? கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: ஒரே விமானத்தில் எடப்பாடியும் ஓபிஎஸ்சும் சென்னைக்கு வர இருந்தனர். அதிமுகவில் இது மிகப்பெரிய அளவில் விவாதங்களையும், ஆலோசனைகளையும் உருவாக்கியது. கடைசியில் இந்த பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நேற்று முதல்நாள் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்த போஸ்ட் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதில் திமுகவிற்கு செக் வைக்காமல் மறைமுகமாக அதிமுகவிற்கும் செக் வைக்கும் வகையில் பேசி உள்ளார். அதில் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும், என்று கூறி உள்ளார். இதன் மூலம் கிட்டத்தட்ட அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது.
ஒரே விமானத்தில் பயணம்
இந்த நிலையில்தான்.. டெல்லியில் இருந்து திரும்பிய எடப்பாடி பழனிசாமி அதிமுக முன்னாள் அமைச்சர் கருப்புசாமி பாண்டியன் மறைவையொட்டி நெல்லைக்கு சென்றுள்ளார். அதேபோல, சாலை மார்க்கமாக ஓபிஎஸ் சென்றுள்ளார். இருவரும் அங்கே ஒரே நேரத்தில் இருப்பார்கள்.
இந்த நிலையில், இன்று மதியம் தூத்துக்குடியியிலிருந்து ஒரே விமானத்தில் எடப்பாடியும் ஓபிஎஸ்சும் சென்னைக்கு வர இருந்தனர். இது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்டு டிக்கெட் புக் பண்ணப்பட்டதா என்கிற பேச்சு அதிமுகவில் விவாதிக்கப்படுகிறது. அதிமுகவில் இது மிகப்பெரிய அளவில் விவாதங்களையும், ஆலோசனைகளையும் உருவாக்கியது. கடைசியில் இந்த பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடியிலிருந்து ஒரே விமானத்தில் எடப்பாடியும் ஓபிஎஸ்சும் வருவதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மதியம் 1:15-மணிக்கு எடப்பாடி மட்டும் விமானத்தில் சென்னை வருகிறார். ஓ.பி.எஸ். தனியாக இன்று மாலையில் வருகிறார்.
மீண்டும் திரும்புகிறார் ஓ பன்னீர்செல்வம்?
எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர். அதாவது எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு சிக்கல் இல்லை. அவர் முதல்வர் வேட்பாளர் + அதிமுக பொதுச்செயலாளர். இரண்டும் இருக்கும். ஆனால் அவர் அண்ணாமலை பதவியை மாற்ற வேண்டும் என்று அமித் ஷாவிடம் கோரிக்கை வைக்க முடியாது. அண்ணாமலை பதவியை தொடருவார் என்று இதற்காக சொல்ல முடியாது. அண்ணாமலை தொடர்பாக என்ன முடிவாக இருந்தாலும் பாஜகவே எடுக்கும். அதில் எடப்பாடி பழனிசாமி தலையிட முடியாது.
டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவில் சேர்ப்பது பற்றி கேட்கப்படாது. இதற்கான அழுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படாது. அதோடு பாஜக டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தால் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடாது என்று செக் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதெல்லாம் போக எடப்பாடி உடன் பேச பாஜகவில் குழு உருவாக்கப்பட உள்ளது. அதாவது அந்த குழுதான் பாஜக - அதிமுக இடையிலான ஆலோசனைகளை மேற்கொள்ளும். முடிவுகளை எடுக்கும்.
இதனால் ஓ பன்னீர்செல்வம் திரும்பி அதிமுக வர வாய்ப்புகள் இல்லை. ஆனால் அதிமுக கூட்டணியில் இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகின்றன.












Click it and Unblock the Notifications