அக்கறையில்லை..மீண்டும் சாராயம்! கள்ளக்குறிச்சியில் பாடம் படிக்கலையா? சேர்ந்து அடித்த டிடிவி-எடப்பாடி
சென்னை: விக்கிரவாண்டியில் புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை அருந்திய ஏழு பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் வலியுறுத்தியுள்ளனர்.
விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்த 7 பேர் மருத்துவமனையில் வாந்தி, மயக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வந்த நபர் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பூரிகுடிசை என்ற கிராமத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்துள்ளார்.

அதைக் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக தற்போது முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நாளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டு அங்கு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கஞ்சனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்," விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பூரிகுடிசை எனும் கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை அருந்தியவர்களில் 7 பேர் உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள்ளாகவே, புதுச்சேரி மலிவு விலை சாராயத்தை அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம் சாராய விற்பனையை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தமிழக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே புதுச்சேரி சாராயத்தை அருந்தி உயிரிழந்ததாக வந்த செய்தியை மூடி மறைக்க முயன்ற திமுக அரசு, அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இன்று மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் திமுக அரசின் மக்கள் மீதான அக்கறையின்மையையும், காவல்துறையின் பொறுப்பற்றத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றன.
எனவே, இனியும் இது போன்று அலட்சியப் போக்குடன் செயல்படாமல் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் சாராயத்தை தடுக்க எல்லைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.
இதேபோல் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று விடியா திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது.
அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications