Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 தொகுதிகளிலும் இரட்டை இலை! கூட்டணி அமைந்தால் பிளான் "பி!" ஜெயலலிதா பாணியில் எடப்பாடி மெகா திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வெற்றிக்காக வியூகம் வகுத்து வரும் அதிமுக பிளான் ஏ, பிளான் பி என இரண்டு திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தல் 2024: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதம் மட்டுமே உள்ளது. பிப்ரவரி மாதத்திற்குள் கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கீடு முடிவு செய்தால் மட்டுமே தேர்தல் வேலையை தொடங்க முடியும். தமிழ்நாட்டில் அரசியல் களம் இப்போதே அனலடிக்க ஆரம்பித்து விட்டது. அதிமுக, திமுக என்ற இரண்டு பெரிய கட்சிகளும் தேர்தல் வியூகத்தை வகுக்க ஆரம்பித்து விட்டன.

AIADMK plans to contest all 40 constituencies on the double leaf symbol in the Lok Sabha election 2024

திமுக வியூகம்: 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று கூறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தோல்வியை பரிசளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். தனித்தனி குழுக்களையும் அறிவித்துள்ள திமுக மள மளவென தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டது. சூட்டோடு சூட்டாக கூட்டணி கட்சிக்களுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையும் தொடங்கி விட்டது. இனி புதிய கட்சிகளுக்கு இடமில்லை என்றும் கூறியுள்ளார் டிஆர் பாலு.

அதிமுக கூட்டணியில் யார்?: அதிமுக உடன் எந்த கட்சி கூட்டணியில் இருக்கிறது என்று இதுவரை உறுதியாக சொல்ல முடியவில்லை. இனி யார் கூட்டணியில் சேரப்போகிறார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி இணைந்து தேர்தலை சந்தித்தன. சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுக.

பாஜக உடன் உறவில்லை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக உடன் கூட்டணி சேரலாம் என்று பலரும் பேசி வரும் நிலையில் அது நடக்காத காரியம் என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறியுள்ளார். பாஜக என்பது கழற்றி விடப்பட்ட ரயில் பெட்டி இனி அதனை அதிமுக என்ற எஞ்சினுடன் இணைக்க மாட்டோம் என்று உறுதியாக கூறியுள்ளார் ஜெயக்குமார்.

அதிமுக பரபர ஆலோசனை: இது ஒருபுறம் இருக்கும் சூழ்நிலையில் கூட்டணி குறித்து பேசுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. அப்போது பிளான் ஏ, பிளான் பி என்று இரண்டு வியூகங்களை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உடன் எந்த பெரிய கட்சியும் கூட்டணி சேராத பட்சத்தில் சொந்த பலத்தில் தேர்தலை தனித்து சந்திக்க தயாராகி விட்டது. இது கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா துணிச்சலுடன் இறங்கிய பாணி. இதே போல எடப்பாடி பழனிச்சாமியும் துணிச்சலுடன் தனித்து போட்டியிட தயாராகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் பிளான் ஏ: ஒருவேளை சிறிய கட்சிகள் அதிமுக உடன் கூட்டணி சேரும் பட்சத்தில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கலாம் எனவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாம். 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அப்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை வீசியது. மோடி ஆதரவு அலை பிரம்மாண்டமாக இருந்தது. ஆனாலும் ஜெயலலிதா பாஜக உடன் கூட்டணி சேரவில்லை. 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா பேச்சு: 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதியிலும், அ.தி.மு.க தனித்து நின்று வெற்றி பெற வேண்டும் என்பதே நம் இலக்கு. கட்சிக்கு எது நன்மையோ, அதை மட்டுமே நான் செய்வேன். நாம் செய்த சாதனைகள் ஏராளம். அதை பட்டி, தொட்டிகளில்லெல்லாம் எடுத்து சொல்லி எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்று சொன்னார் ஜெயலலிதா.

100 சதவிகித நம்பிக்கை: 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான களப்பணிகளை நீங்கள் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். வெற்றிக் கனியை பறிக்க வேண்டும். அப்போது தான் நாம் விரும்பும் மத்திய அரசு அமையும். தமிழகத்திற்கு தேவையானதை இந்திய அரசிடமிருந்து பெற முடியும். அது உங்களால் முடியும் என்று நான் நம்புகிறேன். உங்கள் மீது 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது என்றும் பேசினார் ஜெயலலிதா.

செங்கோட்டை எக்ஸ்பிரஸ்: அ.தி.மு.க என்ற எக்ஸ்பிரஸ் ரயில், புனித ஜார்ஜ் கோட்டையை 6 தடவை வெற்றிகரமாக சென்று அடைந்திருக்கிறது. இந்த ரயில் வரும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி செங்கோட்டை ரயிலாக மாறும். டெல்லி செங்கோட்டை எனும் இலக்கை அடைய இந்த ரயிலுக்கு பச்சைக் கொடி காட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் தயாராகிவிட்டனர். அந்த ரயிலில் இன்ஜின் டிரைவராக நான் இருப்பேன். அந்த ரயிலில் உள்ள வேட்பாளர்களை டெல்லிக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நாம் விரும்புவது போல், மக்கள் வாக்களித்தால், அவர்களுக்கு நாடு நலம் பெற, அமைதி, வளம், வளர்ச்சி என்பதே நம்முடைய தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் என்று சொன்னார் ஜெயலலிதா.

ஜெயலலிதா பாணி: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு பாஜக உடன் கூட்டணி அமைத்தது அதிமுக. பாமக, தேமுதிகவும் கூட்டணியில் இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா பாணியில் களமிறங்க திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் பொதுச்செயலாளரான பின்னர் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்று அதிமுக தொண்டர்களிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக பிளான் பி: அதே நேரத்தில் இந்த லோக்சபா தேர்தலில் இதுவரை கூட்டணி குறித்து அறிவிக்காத தேமுதிக, பாமக இணையும் பட்சத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேசி சில குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிளான் பி ஆகவும் கூட்டணி பேச்சுவார்த்தைக்குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனராம். எது எப்படியோ இந்த முறை லோக்சபா தேர்தல் பலமுனை போட்டியை சந்திக்கப்போகிறது என்பது உறுதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+