விஜய்க்கு எதிரா கிளம்பிட்டாங்கப்பா.. “கப்பு எங்களுக்குதான் பிகிலு”.. அதிமுகவின் பரபர போஸ்டர்! ஆஹா!
சென்னை: "கப்பு முக்கியம் பிகிலு" என நடிகர் விஜய் சூசகமாக பேசிய நிலையில், "2024, 2026ல் கப்பு எங்களுக்குத்தான் பிகிலு" என போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்தி இருக்கிறார்கள் அதிமுகவினர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப் போகிறார் என கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை நடிகர் விஜய் செய்து வருக்கிறார். அண்மையில் நடந்த 'லியோ' படத்தின் வெற்றி விழாவில் விஜய் தான் சந்தித்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

2026 தேர்தலின்போது விஜய் அரசியலுக்கு வருவாரா என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் அது பற்றி லியோ வெற்றி விழாவில் விஜய்யிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் 'கப்பு முக்கியம் பிகிலு' எனக் கூறினார். தனது அரசியல் வருகையையே அவர் மறைமுகமாக கூறியுள்ளதாகவும், விஜய் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்றும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பேசுகையில், "கட்சி தொடங்குவது பெரிதல்ல, மக்கள் செல்வாக்கை பெறுவதே முக்கியம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வாக்குகளை யாரும் கை வைக்க முடியாது. 2026ல் அதிமுக தான் வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "2024, 2026 தேர்தலில் கப்பு தங்களுக்குதான் பிகிலு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் பெயரில் இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கிரிக்கெட் உடை, தொப்பி அணிந்தபடி, கிரிக்கெட் மட்டையை கையில் ஏந்தியவாறு உள்ளார். கோப்பையில் 234/234 எனவும், எடப்பாடி பழனிசாமி மட்டையை விளாச, 40/40 என எழுதப்பட்ட பந்து பறப்பது போலவும், ஜெயலலிதா கைதட்டுவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2024 தேர்தல் களம், திமுக அணி, அதிமுக அணி, பாகக அணி, நாம் தமிழர் கட்சி என பல முனைப் போட்டியாக இருக்கிறது. தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் எந்தப் பக்கம் சாயும் என்றும் தெரியவில்லை. இந்தச் சூழலில், நடிகர் விஜய் பேச்சுக்கு பதிலடியாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம்












Click it and Unblock the Notifications