விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலர் எந்த விதிகளின் அடிப்படையில் பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார் என்றும் மாநில காவல்துரை வழங்கும் பாதுகாப்பு மீது விஜய்க்கே நம்பிக்கையில்லையா எனவும் அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்குமா? எனவும் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய்க்கு உள்ள அச்சுறுத்தலின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இந்த பாதுகாப்பை வழங்கியுள்ளது. விஜய் எங்கு சென்றாலும் அவருடன் துப்பாக்கி ஏந்திய கமோண்டா வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதுபோக தமிழக காவல்துறையும் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கும்.

AIADMK Questions Vijay s Use of Personal Bodyguard Despite Z Security Cover

தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்?

இப்படி பல அடுக்கு பாதுகாப்பு முதல்வர் விஜய்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோக முதல்வர் விஜய்யின் தனி பாதுகாவலர் நயீம் மூசாவும், விஜய் பாதுகாப்புக்காக அவரது நிழல் போலவே வலம் வருவதை பார்க்க முடிகிறது. விஜய்யின் டெல்லி பயணம் முதல் கொண்டு நயீம் மூசா கூடவே சென்று வந்தார். இந்த நிலையில், இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள ஒருவர் தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்? என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அதிமுக எம்.பி இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்? மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா? அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், 'பாதுகாவலர்' என்ற பெயரில் அவரது நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு (Security Protocols) ஏற்புடையதா?

அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் (Access Control Zone) அவர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்? பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு (Information Security) தொடர்பான இந்த முக்கியமான கேள்விகளுக்குத் தமிழக அரசு விளக்கம் அளிக்குமா?" என்று கூறியுள்ளார்.

யார் இந்த நயீம் மூசா?

விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலராக கடந்த சில ஆண்டுகளாக இருப்பவர் நயீம் மூசா. கேரளா அருகேயுள்ள புதுவை பிராந்தியத்தின் மாஹேவில் பிறந்தார். பூர்வீகம் புதுவையாக இருந்தாலும் துபாயில் செட்டில் ஆனவர். துபாயில் ஒரு செக்யூரிட்டி சேவை நிறுவனத்தில் பணியாற்றிய நயீம் மூசா, 2008 ஆம் ஆண்டில் சொந்தமாக பாதுகாப்பு சேவை நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் பெயர் ஜென்ட்டூர் செக்யூரிட்டி சர்வீசஸ் (Gentur Security Services ).

பிரபலங்களுக்கான பாதுகாப்பு பணியை இவரது ஜெண்டூர் நிறுவனமே பெரும்பாலும் வழங்கியுள்ளது. கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் திரை நட்சத்திரங்களுக்கும் நயீம் மூசாவின் நிறுவனம் பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. துபாய்க்கு வரும் வெளிநாட்டு பிரபலங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது பல்வேறு நாடுகளிலும் தனது கிளையுடன் செயல்படுகிறது. விஜய்யின் கட்சி தொடங்கியதில் இருந்து நயீம் மூசா மேற்பார்வையில் கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு அளித்தனர்.

விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளிலும் இந்த நிறுவனங்களின் பவுன்சர்களே பாதுகாப்பு அளித்தனர். நயிம் மூசாவின் பாதுகாப்பு சேவை மீது விஜய்க்கு நம்பகத்தன்மை அதிகரித்ததையடுத்து, அவரை தன்னுடைய தனிப்பட்ட பாதுகாவலராகவே நியமித்துக்கொண்டார். அதன் பிறகில் இருந்து விஜய் எங்கு சென்றாலும் அவரது நிழல் போல கூடவே இருந்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+