அதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது அதிமுக,.
தமிழகத்தில், வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில், 2 கட்டங்களாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும், தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான, முதல்கட்ட, அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, தேனி, கிருஷ்ணகிரி, அரியலூர், சேலம், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல் இது என்று கூறப்படுகிறது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில், இவ்வாறு, பட்டியல் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பட்டியல் குறித்த விரிவான தகவல் அதில் இடம் பெறவில்லை.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.
— AIADMK (@AIADMKOfficial) December 13, 2019
வழக்கமாக ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்த காலகட்டங்களில், எந்த தேர்தலாக இருந்தாலும், அதிமுக முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும். இப்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும், ஓ.பன்னீர் செல்வம் என இரு தலைமை இருக்கும் நிலையிலும், வேகமாக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதிமுக தனது வழக்கமான பாணியில் செயல்பட்டு வரும் நிலையில், முறைப்படியாக தேர்தல் அறிவிக்கவில்லை என சட்டப் போராட்டம் நடத்தி வரும் திமுகவும், தனது வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications