மீண்டும் மீண்டுமா? எடப்பாடிக்கு செக் வைக்கும் எஸ்பி வேலுமணி! இனி ஒன்னும் பண்ண முடியாது! ட்விஸ்ட்!
சென்னை: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி செயற்குழுவை கூட்டி தனக்கான ஆதரவு வட்டத்தை நிலைநிறுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் போட்டி பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை நடத்த இருப்பதாக வெளியான தகவலால் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியில் இருப்பதாக சொல்கின்றனர்.
கோவில் விவகாரம், அமைச்சர்கள் மீதான சர்ச்சை, பெண்கள் பாதுகாப்பு என தமிழக வெற்றிக்கழக அரசுக்கு சில சிக்கல்கள். ஆட்சியை இழந்த திமுக அமைச்சர்களை குறி வைத்து திமுகவுக்கு சிக்கல்கள் என தமிழக அரசியல் களத்தில் சிக்கலுக்கு மேல் சிக்கலாக இருக்கிறது.

இந்த நிலையில் அதிமுகவின் நிலை தான் பரிதாபகரமாக இருக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை அடுத்தடுத்து இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் தோற்காத கட்சி என்ற பெருமையைக் கொண்ட அதிமுக அதனை 2026 சட்டமன்ற தேர்தலில் இழந்திருக்கிறது.
அதிமுக
அது மட்டும் அல்லாமல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி மீதான விமர்சனமும் அவருக்கு எதிரான எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் அதிமுகவில் எப்போது பிரச்சனை வெடிக்கும் என்பதே தெரியாத அளவுக்கு இருக்கிறது. ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விலகிவிட்ட நிலையில் மேலும் சில தலைவர்கள் போர்க்கொடி தூக்கிருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி
கட்சி தாவல் தடைச் சட்டத்தால் தங்கள் பதவி பயிர் போய்விடும் என்பதால் எடப்பாடி உடன் இருந்தாலும் சில தலைவர்கள் கோபத்தில் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. குறிப்பாக எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம் உள்ளிட்டோர் அதிமுக எம்எல்ஏக்களாக தொடர்ந்தாலும், எடப்பாடிக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்த வாரம் அதிமுக செயற்குழுவை கூட்ட எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்பட்டது.
செயற்குழு
பொதுக்குழுவில் ஏராளமானோர் இருக்கும் நிலையில் செயற்குழுவில் அதற்கு பாதிக்கும் குறைவான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்கள் பக்கம் இருப்பதாக நினைத்து எடப்பாடி செயற்குழுவை கூட்டி பொதுச் செயலாளராக தன்னை நினைத்து கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது.
எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்
ஏற்கனவே அதாவது மாவட்ட செயலாளர்களை நீக்குவதற்கு முன்னதாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தங்கள் மாவட்டங்களில் இருந்த செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று இருக்கிறார்கள். ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி செயற்குழுவை கூட்டினால் அது செல்லாது என நீதிமன்றம் செல்ல திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பாகவே செயற்குழுவை கூட்ட எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம் தரப்பு திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியானது.
அதிமுக அதிருப்தி
இந்த நிலையில் தான் கூட்ட நினைத்திருந்த செயற்குழு கூட்ட திட்டத்தை கைவிட்டு இருக்கிறார் எடப்பாடி. மேலும் அதிமுக அதிருப்தி மனநிலையில் இருக்கும் செயற்குழு உறுப்பினர்களை அவரது டீம் தொடர்பு கொண்டு தற்போதைக்கு யார் கையெழுத்து கேட்டாலும் போட்டுக் கொடுக்க வேண்டாம். கையெழுத்து போட்டு கொடுத்திருந்தாலும் அது செல்லாது என அறிக்கை விட வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். இருந்த போதும் எப்போது வேண்டுமானாலும் எஸ்பி வேலுமணி தனக்கு எதிராக திரும்புவார் என்பதால் சற்று பதற்றமான மனநிலையிலேயே இருக்கிறார் எடப்பாடி என்கின்றனர் சேலம் அதிமுகவினர்.


Click it and Unblock the Notifications
