திமுக காது குத்துவது விஜய்க்கா? face cut பார்த்தீங்களா? சட்டசபையில் பரபரத்த அதிமுகவின் அழைப்பிதழ்!
சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து மாபெரும் காது குத்தும் விழா என குறிப்பிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டு வந்த அழைப்பிதழில் காது குத்தப்படுகிறவரின் முக ஜாடை விஜய் மாதிரி இருப்பதாக சொல்லப்படுகிறது. தங்கள் கட்சியை ஊழல் கட்சி என விமர்சித்து வரும் விஜய்க்கு அதிமுகவினர் இப்படியான கிண்டல் தொனியில் பதிலடியை கொடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் 16-ஆவது சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிகிறது. இதனால் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்கு முன்னதாக தற்போதைய தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்காக சட்டசபைக்கு வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கையில் அழைப்பிதழ்களுடன் வந்திருந்தனர். அதில் மாபெரும் காது குத்தும் விழா என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த அழைப்பிதழில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
நாள் : பிப்ரவரி 17,2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இந்த விழாவிற்கு தலைமை தாங்குபவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
காது குத்துபவர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்ரு விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
பி.கு.: சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறையில் "மொய்" வைக்கலாம் என அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் வைத்திருந்தனர்.
இந்த அழைப்பிதழில் ஒருவருக்கு கருப்பு சட்டை போட்டவர் காது குத்துவது போல் இருக்கிறது. பின்னால் ஒருவர் நின்றிருக்கிறார். அருகே ஒரு பெண் அமர்ந்திருக்கிறார். கருப்பு சட்டை போட்டவரால் காது குத்தப்படும் நபர் அழுவது போல் இருக்கிறது.
இந்த அழைப்பிதழ் வைரலான நிலையில் காது குத்துவது முதல்வர் ஸ்டாலின் என்றும், குத்தப்படுபவர் விஜய் என்றும், பின்னால் நிற்பவர் உதயநிதி என்றும் அந்த பெண் கனிமொழி என்றும் இணையத்தில் பரவுகிறது.
எனவே திமுக விஜய்க்கு காது குத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது விஜய், அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், முனுசாமி, கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பதில் அளித்துவிட்டனர். விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலடியாக அதிமுகவினர் அழைப்பிதழில் கிண்டல் தொனியில் விஜய்யின் முகம் போல் இருக்கும் படத்தை போட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீங்கள் கமென்ட்டில் சொல்லுங்கள் இந்த படங்கள் யாரை போல் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications