பாஜக வளருவது அதிமுகவுக்கும் தமிழகத்துக்கும் நல்லது அல்ல..எச்சரிக்கை தேவை-பொன்னையன் பேச்சால் பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் பாஜக வளருவது என்பது அதிமுகவுக்கு நல்லது அல்ல; ஆகையால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அதிமுகவில் யாருக்கு செல்வாக்கு என்பதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகள் முட்டி மோதுவதை தொடர்ந்து வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் அதிமுகவுக்குள் நுழைந்துவிடுவது என்பதில் சசிகலா தீவிரமாக இருக்கிறார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு தங்களது ஆதரவாளர்களை தக்க வைப்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. எதிர்க்கட்சியாக இருந்த போதும் ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தாமல் இருக்கிறது. இதனால்தான் தாமும் இருக்கிறேன் என்பதற்காக ஈபிஎஸ் பேசுகிறார் என விமர்சனங்களை கடந்து செல்கிறது ஆளும் திமுக அரசு.
இன்னொரு பக்கம் பாஜகவோ, ஏதோ ஒரு பிரச்சனையை கிளப்பி லைம் லைட்டில் இருந்து கொண்டே இருக்கிறது. அதாவது அதிமுக செய்ய வேண்டிய வேலையை பாஜக செய்கிறதே என்கிற குமுறல் அதிமுகவிலேயே கேட்க முடிகிறது. அதிமுக தலைவர்கள் சம்பிரதாயத்துக்கான அறிக்கைகளை வெளியிடுவதுடன் நின்றுவிடுகிறார்கள் என்கிற ஆதங்கமும் அக்கட்சியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான மூத்த அதிமுக தலைவர் பொன்னையன் பங்கேற்று பேசினார். அப்போது, பாஜகவைப் பொறுத்தவரை தமிழக நலனுக்கு எதுவும் குரல் கொடுப்பது இல்லை. காவிரி நதிநீர் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடக் கூடியது. பாஜகவால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனுமே இல்லை.
தமிழ்நாட்டில் அதிமுகவின் இடத்தில் பாஜக இருப்பதாக நம்ப வைக்கப்பட்டு வருகிறது. இப்படியான முயற்சி அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல. அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்தில் பாஜக உட்கார இருக்கிறது. அந்த கட்சி நம்முடைய கூட்டணியில் இருக்கிறது. இதனை பகிரங்கமாக பொதுவெளியில் பேசக் கூடிய சூழ்நிலை இல்லை. ஆனால் பாஜகவின் உண்மை முகத்தை சமூக வலைதளங்களில் அதிமுகவினர் அம்பலப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும். அதுதான் அதிமுகவின் எதிர்காலத்துக்கும் நல்லது என்றார் பொன்னையன். பொன்னையனின் இந்த பேச்சுதான் அதிமுக, பாஜக வட்டாரங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications