Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணைக் காட்டிய எடப்பாடி.. எகிறி எகிறி அடிக்கும் அதிமுக லீடர்கள்.. அடடா.. எல்லாமே பக்கா ஸ்கெட்ச்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று கொடுத்த சிக்னலை தொடர்ந்து, அதிமுக தலைவர்கள் உடனடியாக வேலையை ஆரம்பித்துள்ளனர். பாஜகவை கடுமையாக அட்டாக் செய்து பேசத் தொடங்கியுள்ளனர்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அறிவித்தார். இதனையடுத்து, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக கூட்டணியில் இனி இல்லை, 2024ல் மட்டுமல்ல, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி உறுதி செய்ததை அடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

AIADMK seniors attacks bjp after got signal from Edappadi palanisamy

என்ன நாடகமா?: ஆனால், இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அதிமுக நாடகமாடுவதாகவும், தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் சேர்ந்து கொள்வார்கள் என்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பாஜக மேலிடத்தின் ஐடியாவோடு தான் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார், சிறுபான்மையினர் ஓட்டுகளை குறிவைத்துத்தான் பாஜகவும் அதிமுகவும் இப்படி இறங்கியுள்ளன என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுஒருபுறம் இருக்க, பாஜகவை கழற்றிவிட்ட வேகத்தில் இஸ்லாமிய கட்சிகளை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறார் ஈபிஎஸ். இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, சிறையில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த அனுமதி ஆகிய விவகாரங்களில் குரல் எழுப்பி வருகிறார். தொடர்ந்து இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி கொடுத்த சிக்னல்: இந்நிலையில் தான், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுகவின் 52வது தொடக்க விழா கொண்டாட்டமும் அதைத்தொடர்ந்து ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்து சொல்லுங்கள், மக்களுக்கு இந்த விஷயத்தில் நம் மீது எந்த சந்தேகமும் வரக் கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் கசிந்தன.

இதனை உறுதி செய்யும் வகையில் மேடைக்கு மேடை அதிமுக தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என அழுத்தமாகக் கூறி வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜகவை பொது மேடைகளில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் அதிமுகவினர். முன்பு, பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என ஈபிஎஸ் ஆர்டர் போட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்றைய கூட்டத்திற்குப் பிறகு அதிமுக சீனியர்களின் பாஜக மீதான அட்டாக்கில் மாற்றம் தென்படுகிறது.

மாஜிக்கள் காட்டும் ஆவேசம்: திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சைத்தான் என்று உங்களால் சொல்லப்படுகின்ற அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் விலகி உங்களை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எப்போது அந்த கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம்.

பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சி. கூட்டணி முறிவால் எடப்பாடி பழனிசாமி 1000 மடங்கு மகிழ்ச்சியாக உள்ளார். தேர்தலுக்கு பிறகு சேர்ந்து கொள்வார் என்று பத்திரிக்கைகள் எழுதிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். இனி செத்தாலும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

இப்பவும் இல்ல.. எப்பவும் இல்ல: அதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், "பாஜகவை வெட்டி துண்டாக்கி கடலில் மூழ்கடித்துவிட்டோம். வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைப்பது இல்லை. தமிழ் மொழிக்காக எதிரான, தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எதிரான பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய பாஜக தலைவர்கள் தமிழர்களே இல்லை" என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஆக, எடப்பாடி பழனிசாமி போட்ட உத்தரவின்படி, அதிமுகவின் மாஜி அமைச்சர்கள் வேலையை தொடங்கிவிட்டனர். பாஜகவுடன் இனி எக்காலத்திலும் சேரமாட்டோம் என்பதை மக்கள் மத்தியில் உணர்த்தும் வகையில் அதிமுக தலைவர்களின் பேச்சுகள் அமைந்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமியின் இந்த யோசனை பலன் தருமா? போகப்போகத் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+