"இவருமா".. என்னங்க இது.. புயலைக் கிளப்பிய "பூரணம் ஆறுமுகம்".. விஜய பாஸ்கருக்கு சிக்கல்!!
விஜயபாஸ்கர் படத்துடன் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன
சென்னை: அங்கே இங்கே என செய்திகள் வந்த நிலையில், கடைசியில் அமைச்சர் விஜயபாஸ்கரே சசிகலா வரவேற்பு போஸ்டரில் தோன்றிவிட்டார்.. இதுதான் அதிமுகவில் புது குண்டை தூக்கி போட்டு வருகிறது.
சசிகலாவின் என்ட்ரிக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் தினந்தோறும் மவுசு கூடிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் சசிகலாவை பற்றின தகவல்கள்தான் மீடியாவில் முக்கிய இடத்தை விடாமல் பிடித்து கொண்டிருக்கின்றன.
நாளை மறுநாள் சசிகலா வர போகிறார்.. அதனால், அவரை பிரம்மாண்டமான முறையில் வரவேற்க அமமுக ஜரூராக தயாராகி வருகிறது.. அதேபோல அதிமுகவில் ஒருசிலரும் தங்கள் மகிழ்ச்சியை போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறார்கள்..

நீக்கம்
அப்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டவர்கள் எல்லாரும் அடுத்த அடுத்த செகண்ட்டுகளில் கட்சியை விட்டே தூக்கி அடிக்கப்பட்டு வருகிறார்கள்.. அந்த வகையில் புதுக்கோட்டையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.. "தீயசக்தி திமுகவை வீழ்த்த கழகத்தை வழிநடத்த வருகை தரும் கழக பொதுச்செயலாளர் தியாக தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக வெல்க" என்று அச்சிட்டுள்ளார்

எடப்பாடியார்
போஸ்டரில் ஜெயலலிதா படத்தைவிட பெரிய சைஸில் சசிகலா போட்டோ உள்ளது.. அதே போஸ்டரின் ஒருமூலையில் ஓபிஎஸ், எடப்பாடியார் போட்டோக்கள் இருக்கின்றன.. ஆனால், இவர்களைவிட பெரிய சைஸ் போட்டோவில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளார். இதேபோல, புதுக்கோட்டை நகர அதிமுக இணை செயலர் பூரணம் ஆறுமுகம் என்பவரும், சசிகலாவை வரவேற்று, போஸ்டர் ஒட்டியுள்ளார். இது அதிமுக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் தற்போதைய ஹாட் நியூஸ்.

விஜயபாஸ்கர்
ஏனென்றால் சசிகலா வரவேற்பு விஷயத்தில், ஒரு அமைச்சர் போட்டோவை வைத்து போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளது இதுதான் முதல்முறை.. விஜயபாஸ்கரை பொறுத்தவரை அவரது சொந்த தொகுதி இது.. இவர் தீவிரமான சசிகலாவின் ஆதரவாளரும்கூட.. சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்.. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அம்பலமானதால்தான், விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் என்பது தமிழகம் அறிந்த ஒன்றுதான்..

நெருக்கம்
இந்த 4 வருட காலம் சசிகலாவை எந்த ரூபத்திலும் விஜயபாஸ்கர் விமர்சித்ததும் இல்லை. சசிகலாவுக்கு சில அமைச்சர்கள் ஏற்கனவே வெளிப்படையான ஆதரவை தெரிவித்த நிலையில், குழப்பத்தில் 2, 3 அமைச்சர்கள் உள்ளனர்.. சசிகலா பக்கம் தாவுவதா? வேண்டாமா என்று எந்த முடிவை எடுப்பது என்று தெரியாமல் இருப்பவர்கள் இவர்கள்.. இதில் ஒருவர்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று கடந்த வாரம்கூட ஒரு செய்தி கசிந்தது..

காரணம் என்ன?
ஒருவேளை அதை மனசில் வைத்துதான், இப்படி போஸ்டர் சொந்த தொகுதியில் ஒட்டப்பட்டுள்ளதா? அல்லது விஜயபாஸ்கருக்கே தெரியாமல் நடந்த ஒன்றா என்று தெரியவில்லை.. ஆனால், இப்படி ஒரு போஸ்டர் ஒட்டினதுக்கு இன்னும் யாருமே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.. காரணமும் தெரியவில்லை.. என்னவா இருக்கும்?!
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications