செல்லூர் ராஜூக்கு இப்படி ஒரு முகமா! உதயநிதி தலைக்கு ரூ10 கோடி- சொன்ன பதிலால் "அலறிய" அதிமுக!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு உ.பி. சாமியார் ரூ10 கோடி விலை அறிவித்தது தொடர்பாக அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த ஒரு கருத்துதான் அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சனாதன ஒழிப்பு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்தை பாஜக தலைவர்கள் மிக கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்த பிரச்சனையில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக பட்டும் படாமலும் தேவையில்லாத பிரச்சனை, கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்ற வகையில் பதில் தந்து வருகிறது.

வழக்குகள் பாய்ந்தன: உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ10 கோடி விலை அறிவித்த உத்தரப்பிரதேச சாமியார் மீது தமிழ்நாடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல சனாதன ஒழிப்பு என பேசியதை இனப்படுகொலை செய்ய தூண்டுகிறார் என பொய் பரப்பிவிட்ட பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாள்வியா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா அமைப்பு மிரட்டல்: இதனிடையே ஆந்திராவை சேர்ந்த இந்து அமைப்பு ஒன்று உதயநிதி கன்னத்தில் காலணியால் அறைய வேண்டும்; அப்படி அறைந்தால் ரூ10 லட்சம் தருவோம் என விஜயவாடாவில் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதான் அதிமுக: இப்பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக மூத்த தலைவர் செல்லூர் ராஜூ அளித்த பதில்: சனாதனத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய விளக்கம் தருவார். எங்களுடைய இயக்கம், கொள்கை என்பது தனிப்பட்டது. எல்லா மதத்தையும் சமமாக கருதக் கூடியவர் நாங்கள். அது இந்துக்களாக இருந்தாலும் இஸ்லாமியராக இருந்தாலும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி. அனைத்து மதத்தினரையும் மதிக்கக் கூடிய கட்சி அண்ணா திமுக. எங்களுடைய கட்சியின் அவை தலைவரே இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த இயக்கத்துக்கு ஏற்கனவே அவைத் தலைவராக் இருந்தவர் வள்ளிமுத்து. தலித் சமூகத்தில் பிறந்த தனபாலை அதிமுகதான் சபாநாயகராக அமரவும் வைத்தது.
வன்முறை கிடையாது: உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ10 கோடி விலையை சாமியார் அறிவித்திருப்பதை நகைப்பாக பார்ப்பதா? எப்படி பார்ப்பது என தெரியவில்லை. இந்த அளவுக்கு சாதுக்களே மனம் வெதும்பி, மனம் புழுங்கிப் போய் பேசியிருக்காங்க... அந்த வகையில்தான் பார்க்கனும். இதனை நான் வன்முறையாக கருதவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்து இது. தனிப்பட்ட முறையில் எனக்கு ஆயிரம் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். இயக்கம், கட்சி என வரும் போது இயக்கத்தின் குரலாக நான் ஒலிக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சரும் மூத்த அதிமுக தலைவருமான செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக அதிர்ச்சி: உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ10 கோடி விலை அறிவித்ததை தமிழ்நாட்டு தலைவர்கள் பலரும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர் செல்லூர் ராஜூ, தனிப்பட்ட முறையில் அப்படியான ஒரு அறிவிப்பு வன்முறை இல்லை என கூறி ஆதரவு தெரிவித்திருப்பது அதிமுகவிலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications