ஒற்றைத்தலைமை..ஓபிஎஸ் வீட்டில் 4வது நாளாக ஆலோசனை..மா.செக்களை அணி சேர்க்க முயற்சி

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து தனது ஆதரவாளர்களுடன் நான்காவது நாளாக ஓ. பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒற்றை தலைமை விவகாரம் குறித்து தனது ஆதரவாளர்களுடன் நான்காவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்தம்பி துரை, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து இரு தினங்களுக்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவை வழிநடத்தி செல்ல இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமையே சிறந்தது. அதனால் வருகிற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை பதவி முறையை மீண்டும் தீர்மானமாக கொண்டு வர வேண்டும்.

 ஒற்றைத்தலைமை

ஒற்றைத்தலைமை

எடப்பாடி தலைமையில் ஒற்றைத் தலைமை உருவாக வேண்டும் என்ற கருத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்தி பேசியதாக தெரிகிறது. இந்த கருத்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை பற்ற வைத்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள்

ஓபிஎஸ் பேச்சு

ஓபிஎஸ் பேச்சு

நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒற்றை தலைமை என்ற பேச்சு ஏன் எழுந்தது என்று எனக்கு தெரியவில்லை . எந்த அதிகார ஆசையும் எனக்கு இல்லை ; என்னையும் தொண்டர்களையும் பிரிக்க முடியாது என்றார். அதிமுக அரசு கலைந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்தேன். இருவரும் இணைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் அன்று விரும்பினர். அதற்கு மதிப்பளித்து நான் இணைந்தேன்.

துணை முதல்வர்

துணை முதல்வர்

பிரதமர் என்னை துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள அழுத்தம் கொடுத்தார். நான் ஏற்றுக்கொண்ட துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த பிரத்யேக அதிகாரமும் இல்லை. இருப்பினும் பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க அதனை ஏற்றுகொண்டேன் என்று கூறினார். ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

4வதுநாளாக ஆலோசனை

4வதுநாளாக ஆலோசனை

இந்த நிலையில் சேலம் சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி திருவண்ணாமலையில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று நான்காவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஆதரவு யாருக்கு

ஆதரவு யாருக்கு

அதிமுக மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தனி தனியாக அணி சேர்ப்பதற்கு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+