ரொம்ப நாளா நாங்க எதிர்பார்க்குறது நடந்தா நல்லது.. பாஜக அதிமுக கூட்டணி முறிவு? எடப்பாடி டீம் சூசகம்!

பாஜக கூட்டணியில் இருந்து விலக இதுதான் சரியான நேரம் என்று ஈபிஎஸ் டீம் கருதுவதாகத் தெரிகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பாஜக இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், "நாங்கள் நீண்டகாலமாக எதிர்பார்ப்பது நடந்தால் நல்லது தான்" என சூசகமாக கூட்டணி பிளவை வலியுறுத்தியுள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பாபு முருகவேல்.

கூட்டணி தர்மத்தை மீறி தங்கள் கட்சி நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை பாஜகவினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினரால் எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிக்கப்பட்டதை அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர்.

அதிமுக - பாஜக விரிசல்

அதிமுக - பாஜக விரிசல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு அரசியல் களத்தின் திசைகள் மாறி வருகின்றன. பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பகிரங்க குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர். இது பாஜக - அதிமுக இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. "பாஜகவில் இருந்து ஆட்களை சேர்த்துதான் நீங்கள் பெரிய கட்சி என நிரூபிக்க வேண்டுமா? ஒவ்வொரு வினைக்கும் நிச்சயம் எதிர்வினை உண்டு" எனச் சீறி இருந்தார் அண்ணாமலை.

வரிசையாக அதிமுக பக்கம்

வரிசையாக அதிமுக பக்கம்

தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பாஜகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் வைத்துள்ளார். சிடிஆர் நிர்மல்குமாரை தொடர்ந்து பாஜக ஐ.டி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், பாஜக அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்ற ஜோதி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

முற்றிய பாஜக அதிமுக மோதல்

முற்றிய பாஜக அதிமுக மோதல்

இதனால் டென்ஷனான பாஜகவினர் சமூக வலைதளங்களில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சிக்கும் வகையில் பாஜகவின் விளையாட்டு பிரிவு தலைவரான அமர் பிரசாத் ரெட்டி ட்வீட் செய்திருந்தார். கூட்டணிக் கட்சியான அதிமுக இம்மாதிரியான செயலை செய்திருக்கக் கூடாது. நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கட்சி மாறிய கொள்கையற்ற பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா? என்று அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டிருந்தார்.

எடப்பாடிக்கு எதிராக

எடப்பாடிக்கு எதிராக

இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக இளைஞரணியினர் போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே பாஜக இளைஞர் அணி சார்பில் அதன் மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி தலைமையில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாஜி அமைச்சர் கண்டனம்

மாஜி அமைச்சர் கண்டனம்

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உருவப்படம் பாஜகவினரால் எரிக்கப்பட்டதை அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கண்டித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள செம்மலை, பாஜகவின் பல கொள்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம். கூட்டணியில் இருப்பதற்காக பாஜகவின் கொள்கைகளை ஏற்க முடியாது, எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிக்கப்பட்டதை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.

நாங்கள் எதிர்பார்ப்பது

நாங்கள் எதிர்பார்ப்பது

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக செய்தி தொடர்பாளர், முன்னாள் எம்.எல்.ஏ பாபு முருகவேல், "முதிர்ச்சி இல்லாத அரைவேக்காடுகளின் அரசியல் இப்படித்தான் இருக்கும், தவறான வார்த்தை கையாடல்களும் உருவ பொம்மை எரித்தலும். நாங்கள் நீண்டகாலமாக எதிர்பார்ப்பது நடந்தால் நல்லதுதான். புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை தான் நினைவுக்கு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைவர்கள்

அதிமுக தலைவர்கள்

அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருக்கும் பல தலைவர்கள் பாஜக உடனான கூட்டணியை விரும்பவில்லை. இதுதொடர்பாக ஓப்பனாகவே பலர் பேசியுள்ளனர். அப்போதெல்லாம் அது சர்ச்சையாக வெடித்ததும், ஈபிஎஸ் தலையிட்டு அதிமுகவினரை சமாதானப்படுத்தியதும் நடந்துள்ளது. இப்போது பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு பலர் தாவியுள்ள நிலையில், அதற்கு பாஜக கடுமையாக எதிர்வினை ஆற்றி வருவதால் ஈபிஎஸ் தரப்பு, பாஜக கூட்டணியில் இருந்து விலக இதுதான் சரியான நேரம் என்று கருதுவதாகத் தெரிகிறது. ஈபிஎஸ் அணியின் பாபு முருகவேல் அதனையே தனது ட்வீட் மூலம் குறிப்புணர்த்தி இருக்கிறார் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+