காக்கா உஷார் ஆகிடும்.. அண்ணாமலையை அப்படி பேசிய விந்தியா.. ஓபிஎஸ்சை சொன்னதுமே அதிர்ந்த மேடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழரைகள் தமிழ்நாட்டில் பத்தாது என்று இன்னொரு ஏழரை கிளம்பி வந்திருக்கிறது... அதுதான் அண்ணாமலை.. என மேடையில் நடிகை விந்தியா கடுமையாக விமர்சித்தார்.. அதேபோல் பிஜேபி ஆபிஸில் தோட்ட வேலைக்கு கூப்பிட்டால் கூட ஓடிப்போகும் நிலைமையில் ஓபிஎஸ் இருப்பதாகவும் விந்தியா விமர்சித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னை புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் கேபி கந்தன் தலைமையில், சென்னையை அடுத்த கோவூரில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பேசுகையில் , "இருக்குற ஏழரைகள் தமிழ்நாட்டில் பத்தாது என்று இன்னொரு ஏழரை கிளம்பி வந்திருக்கிறது... அதுதான் அண்ணாமலை..

AIADMK stage speaker Vindhya criticizes O Panneerselvam and BJP leader Annamalai on stage

என்னை பொறுத்தவரை அண்ணாமலைக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. ஸ்டாலினை பொறுத்தவரை எப்படி என்றால் விடியல் தருகிறேன், விடியல் தருகிறேன் என்று பொய் சொல்லிக்கொண்டே சுற்றுவார். அண்ணாமலையை பார்த்தீங்க அப்படீன்னா கூட இருப்பவரையே வீடியோ எடுத்து வெளியில் விட்டு சுற்றுவார்..

அண்ணாமலை ஒரு கட்சியில் தலைவராக இருப்பதற்கு பதிலாக, ஏதாவது கல்யாணத்தில் வீடியோகிராபராக போயிருந்தால் இன்னும் பெரிய ஆள் ஆக வந்திருப்பார்.. காக்கா கூட தன் கூட்டில் ஏதாவது குயில் வந்து முட்டை போட்டால், தன் முட்டை என்று நினைத்து அடைகாக்கும். ஆனால் எப்போது முட்டை உடைந்து குயில் சப்தம் போட ஆரம்பிக்குமோ, அப்போது காக்கா உஷார் ஆகிவிடும்.. இது நம்ம இனம் இல்லை என்று வெளியில் தள்ளிவிடும்.


அதே மாதிரி தான் பிஜேபியும் இன்றைக்கு.. அண்ணாமலையாகவே வாய்விட்டு நம்மை சீண்டி பார்த்து வெளியில் போனால் நம்ம பொறுப்பு இல்லை.. போகப்போக பிஜேபில இருக்குறவங்க நம்ம கூட இருக்குற வரைக்கும் தான் அவங்களுக்கு மரியாதை என்பதை நினைப்பார்கள் ..

52 வருசம் ஆலமரமான அதிமுகவை நேற்று முளைத்த புல் எல்லாம் அசைச்சு பார்க்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம்.. இதுல இந்த அண்ணாமலை நம்மிடம் கிளாஸ் எடுக்கிறார்.. எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும்.. தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும்.. கட்சியை எப்படி நடத்த வேண்டும்.. என்று அண்ணாமலை கிளாஸ் எடுக்கிறார்.. தம்பி அண்ணாமலை... நீங்க கிளாஸ் எடுக்கிற ஸ்கூலில் நாங்க ஹெட்மாஸ்டர்.. நீங்க எங்ககிட்ட எல்லாம் பேசக்கூடாது. இதுல அண்ணாமலை சொல்கிறார்.. அதிமுகவின் நான்கரை வருட ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தோம் என்கிறார்..


அண்ணாமலை சப்போர்ட் பண்ணுனது எங்கள் ஆட்சிக்கு இல்லை... ஓபிஎஸ்க்கு.. எங்க அண்ணன் மற்றும் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து அம்மாவின் ஆட்சியை காப்பாற்றிவிட்டார்கள்.. உங்களால் தான் ஓபிஎஸ்சை காப்பாற்ற முடியவில்லை.. தெருவில் நிற்கிறார்.. கூப்பிட்டு கூட்டணியில் வைத்துக் கொள்ளுங்கள்... வாரி கொடுத்திடுவாரு எம்பிக்களை.. இன்றைக்கு ஓபிஎஸ் இருக்குற நிலைமையில்,. "பிஜேபி ஆபிஸில் தோட்ட வேலைக்கு கூப்பிட்டா கூட ஓடிப்போற நிலைமையில் இருக்கிறார்" இவ்வாறு விந்தியா கடுமையாக பேசியிருந்தார்.. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+