திமுகவிற்கு செக்.. அதிமுகவின் பிரம்மாஸ்திரம்.. பழைய ஓய்வூதிய திட்டம் போச்சு? அரசு ஊழியர்களுக்கு ஷாக்
சென்னை: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசு கொண்டு வராததற்கு எதிராக எதிர்க்கட்சியான அதிமுக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறதாம்.
அதிமுக வெளிப்படையாக பழைய ஓய்வூதிய திட்டதை எதிர்த்த கட்சிதான். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியே சில மேடைகளில் நேரடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்து உள்ளார். ஆனால் இப்போது அதற்கு ஆதரவாக நிலைப்பாட்டை அவர் எடுப்பார் என்கிறார்கள்.

ஆளும் திமுகவிற்கு எப்போதும் சாதகமாக அரசு ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக ஆளும் திமுக மீது அப்செட்டில் உள்ளனர். அதற்கு முதல் காரணம் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசு கொண்டு வராதது என்கிறார்கள். முக்கியமாக பழைய ஓய்வூதிய திட்டம் திமுகவின் பெரிய வாக்குறுதிகளில் ஒன்று. ஆனால் அதை திமுக நிறைவேற்றவில்லை.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி, வரும் நாட்களில் பல தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. தொடர்ந்து போராட்டங்கள் மூலமும், கோரிக்கை மனுக்கள் வாயிலாகவும் தங்கள் நிலைப்பாட்டை அரசுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இது பூதாகரமாக முன், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இதில் ஒரு முக்கிய முடிவு எட்டப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் ஊழியரின் கடைசி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும், அகவிலைப்படியும் (DA) அவ்வப்போது திருத்தப்படும். இது ஓய்வுக்குப் பின் ஊழியர்களுக்கு சிறந்த நிதி பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் வழங்குகிறது.
தமிழக அரசின் திட்டம் - பழைய ஓய்வூதிய திட்டம்
ஜனவரி 1, 2004 முதல், புதிய அரசு ஊழியர்களுக்கு OPS திட்டம் நிறுத்தப்பட்டு, தேசிய ஓய்வூதிய முறை (NPS) அறிமுகப்படுத்தப்பட்டது. NPS என்பது சந்தை அடிப்படையிலான பங்களிப்புத் திட்டமாகும், இதில் ஓய்வூதியம் முதலீடுகளின் சந்தை செயல்பாட்டைப் பொறுத்தது. சமீபத்தில் சில மாநிலங்கள் OPS திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்கு மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும், பெரும்பாலான மாநிலங்களில், 2004-க்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.
அக்டோபர் 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் வசதி ஏற்படுத்தப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளித்துள்ளது. இருப்பினும், இது பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கையுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய சலுகையாகவே பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்குவதால், ஸ்டாலின் அரசு விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவது போன்ற பிற வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். இதற்கான ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரைகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பல்வேறு சலுகைகள் மற்றும் பிற கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. பழைய ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.
சட்டமன்றத் தேர்தல்- Old Pension Scheme
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. OPS திட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இழப்புகளைக் குறைக்கும் வகையில் சில மாற்றங்களுடன் இத்திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு பாரம்பரியமாக அதிகம். ஆனால், தற்போதைய ஆட்சியில் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஒருவித அதிருப்தி நிலவுகிறது. இதனால் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. தபால் வாக்குகள் அதிமுக, பாஜகவுக்குச் சென்றது இதற்குச் சான்றாகக் கூறப்படுகிறது. எனவே, அரசு ஊழியர்களின் மனதை திருப்திப்படுத்தும் வகையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications