முக்கியமான 3 விஷயம்.. "ஆக்சனுக்கு" தயார்.. மா.செக்களுக்கு பறந்த உத்தரவு.. மீண்டும் அதிமுக கூட்டம்!
சென்னை: மீண்டும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூலை 9ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான உத்தரவு மாவட்ட செயலாளர்களுக்கு சென்றுள்ளது.
அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று சசிகலா வேகமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவர் எவ்வளவு முயன்றும் கூட அதிமுகவின் முக்கிய தலைகள் யாரும் பெரிதாக சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
தினமும் ஒரு ஆடியோ என்று பல்வேறு அதிமுக உறுப்பினர்களிடம் போனில் பேசி, அதை இணையத்திலும் சசிகலா வெளியிட்டு வருகிறார். சசிகலா 100க்கும் மேற்பட்ட ஆடியோக்களை வெளியிட்டும் கூட இதுவரை அதிமுகவில் அவர் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை.

சசிகலா
ஆனாலும் சசிகலா எப்படியாவது அதிமுகவிற்குள் செல்லலாம், அதிமுகவை கைப்பற்றலாம் என்று தீவிரமாக மூவ் செய்து வருகிறார். ஒரு பக்கம் சசிகலா பிரச்சனை இருக்கும் போது இன்னொரு பக்கம் தமிழ்நாடு அரசு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விசாரிக்கும் முடிவில் உள்ளது. முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஊழல்களை விசாரிக்கும் முடிவில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

வழக்கு
இவர்களுக்கு எதிரான புகார்கள், முறைகேடுகளை தமிழ்நாடு அரசு லிஸ்ட் போட்டு விசாரிக்கும் திட்டத்தில் உள்ளது. இதற்கான காய்கள் ஒரு பக்கம் நகர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளனர். இது போக தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

திமுக
உள்ளாட்சி தேர்தலுக்கு ஏற்கனவே திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள் ஏற்கனவே இதற்காக களமிறங்கிவிட்டனர். இந்த நிலையில்தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூலை 9ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான உத்தரவு மாவட்ட செயலாளர்களுக்கு சென்றுள்ளது. இந்த 3 விஷயங்கள் குறித்துதான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர்.

ஆக்சன்
கடந்த அதிமுக கூட்டத்தில் சசிகலாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் நீக்கப்பட்டனர். அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி ஆகியோரும் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் இதேபோன்ற ஆக்சன் இந்த கூட்டத்திலும் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications