செப். 28ம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம்.. ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.. முக்கிய முடிவு?
சென்னை: செப்டம்பர் 28 ஆம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி கூட்டம் நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சட்டமன்ற தேர்தல், கட்சி பிரச்சனை, நிர்வாகிகள் நியமனம், தேர்தல் திட்டங்கள், கட்சி பொறுப்புகள் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று கட்சி கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. அதோடு அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வருகிறது.
இந்த நிலையில்தான் செப்டம்பர் 28 ஆம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து இதில் ஆலோசனை செய்ய உள்ளனர்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. அழைப்பிதழ் உள்ள செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications