"டீம் ரெடியா இருக்கு".. இபிஎஸ் சொன்ன ஒரு வார்த்தை.. நிம்மதி பெருமூச்சு விட்ட "ர.ரக்கள்".. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று எதிர்கட்சித் தலைவரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் இடையே கொஞ்சம் நிம்மதியை கொடுத்துள்ளது.

கடந்த ஆட்சியில், அதிமுக அமைச்சர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில். வாணியம்பாடியைச் சேர்ந்த இவர் மீது சில நிதி முறைகேடு புகார்கள் உள்ளன.

வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடிகளை ஏமாற்றிவிட்டதாக இவருக்கு எதிராக புகார்கள் உள்ளன. இந்த நிலையில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நிலோபர் கபில் நீக்கப்பட்டார்.

மோதல்

மோதல்

அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலருடன் ஏற்பட்ட மோதல்தான் இவரின் நீக்கத்திற்கு காரணம் என்றாலும், இன்னொரு பக்கம் இந்த நிதி முறைகேடுகள் குறித்த புகார்களும் இவரின் நீக்கத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அப்போதே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் ஒரு சின்ன கலக்கம் இருந்தது. அதாவது ஊழல் புகார், முறைகேடு புகார் வந்தால் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்களோ, கழட்டிவிடுவார்களோ என்ற அச்சம் சில மாஜிக்கள் மத்தியில் நிலவியதாக கூறப்பட்டது.

தொடர்

தொடர்

இதற்கு ஏற்றபடியே இன்னொரு பக்கம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை திமுக அரசு கையில் எடுத்தது. நடிகையை ஏமாற்றிய வழக்கில் மாஜி அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். இதையும் அதிமுக தலைமை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர்கள் பலரின் ஒப்பந்தங்கள், நிதி செலவினங்கள் குறித்த ரிப்போர்ட் எல்லாம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் இதற்கான கைதுகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கைது

கைது

முந்தைய ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்யும், விசாரிக்கும் முடிவில் அரசு இருப்பதாக தெரிகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி இதில் ஒரு பக்கம் வேகம் காட்டி வருகிறார். அதோடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதிமுகவிற்கு மொத்தமாக லாக் போடும் திட்டத்திலும் இருக்கிறார்.

அறிக்கை

அறிக்கை

அதிமுகவினர் மத்தியில் இதெல்லாம் ஒரு வித கலக்கத்தை இது ஏற்படுத்தி உள்ள நிலையில்தான், நேற்று எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையை வெளியிட்டார். அதிமுகவை திமுக பழி வாங்குகிறது. ஆக்கபூர்வ அரசியலில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக, எதிர் கருத்து பேசுபவர்களை கைது செய்கிறது. திமுகவிற்கு எதிராக பேசினாலே கைது என்று நிலை உள்ளது.

கைது

கைது

எங்கள் கட்சி எஃகு கோட்டை போன்றது. இதற்கு எதிராக வரும் திமுகவின் அடக்குமுறைகளை நாங்கள் எதிர்கொள்வோம். அஞ்சுவது யாதொன்றுமில்லை - அஞ்ச வருவதுமில்லை. உங்கள் அடக்கு முறைகளை நிறுத்துங்கள் ஆட்சிக்கு வந்ததும் திமுக பழிவாங்கும் நடவடிக்கைகளை இறங்கி உள்ளது. திமுக மாறவில்லை என்பதை இது காட்டுகிறது என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

டீம்

டீம்

இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டு இருக்கும் ஒரு வாக்கியம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக அரசின் அடக்குமுறையினையும், பொய் வழக்குகளையும் சட்ட ரீதியாகச் சந்திக்கக்கூடிய வல்லமை அதிமுகவிற்கும், அதன் சட்டப் பிரிவிற்கும் உண்டு என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு இருக்கிறார். தமிழ்நாடு அரசு வரும் நாட்களில் எடுக்க போகும் ஆக்சன்களை அதிமுக சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதை அறிவிப்பதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.

சட்ட போராட்டம்

சட்ட போராட்டம்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் சில கைதுகள், விசாரணைகள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சட்ட போராட்டத்தை தொடங்கும் திட்டத்தில் அதிமுக இறங்கி உள்ளது. இதற்காக அதிமுக தனது சட்ட குழுவை தயாராகும்படியும் உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது. நிறைய வழக்குகள் வரலாம், கைதுகள் நடக்கலாம், அதனால் வழக்கறிஞர்கள் தயாராக இருக்க வேண்டும் உத்தரவு பறந்துள்ளதாம்

உத்தரவு

உத்தரவு

லீகல் டீமை தயார் நிலையில் இருக்கும்படி மூத்த வழக்கறிஞர்களுக்கு தகவல் சென்றுள்ளதாம். இதை குறிப்பிடும் வகையில்தான் நேற்று எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை வெளியிடப்பட்டது என்கிறார்கள். இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். வழக்குகள் வந்தால் கட்சி உங்களுடன் இருக்கும் என்று நிர்வாகிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாகவும் இந்த அறிக்கை அமைந்துள்ளது என்கிறார்கள்.

பீதி

பீதி

திமுக அரசு பல முக்கிய கோப்புகளை தூசி தட்டுவதாக செய்திகள் வந்த போது அதிமுக தரப்பில் சிலர் கிலியில்தான் இருந்தனர். அதிமுக தலைமை தங்களுடன் இருக்குமா இல்லை நிலோபர் கபிலுக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் ஏற்படுமோ என்ற குழப்பம் சிலர் மத்தியில் இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை மூலம் லீகல் டீம் கண்டிப்பாக உதவும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+