ஒரே நாளில் திமுக அரசுக்கு வந்த 5 சோதனைகள்.. ஆவேசமாக கையிலெடுத்த அதிமுக.. பக்கபலமாக வந்த பாஜக
சென்னை: ஒரு பக்கம் திமுக அமைச்சர்களை குறிவைத்த அமலாக்கக்துறை அதிரடியாக இன்று சோதனை நடத்தி வரும் நிலையில், ஒரே நாளில் திமுக அரசுக்கு எதிராக ஐந்து விஷயங்களை அதிமுக கையில் எடுத்துள்ளது. அதிமுகவின் அதிரடியான முயற்சிக்கு பாஜக பக்கபலமாக வந்தது.
இன்று செப்டம்பர் 12ம் தேதி நிச்சயமாக திமுக அரசுக்கு கடும் சவாலான நாளாக அமைந்துள்ளது. அரசியல் ரீதியாகவும் சட்டம் ஒழுங்கு ரீதியாகவும் பல சிக்கல்களை உடனே சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

நேற்று முன்தினம் தான் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடியால் சென்னையில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சென்னைடியின் ஐடி காரிடர் பகுதியான ஒஎம்ஆர் சாலை இரவு முழுவதுமே ஸ்தம்பித்தது. சென்னையில் ஒரே நாளில் ஏற்பட்ட மோசமான போக்குவரத்து நெரிசல் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. இந்த விவகாரம் நேற்று முழுவதுமே பேசப்பட்டது.
இந்த சூழலில் இன்று நடந்த ஐந்து விஷயங்களை அதிமுக கையில் எடுத்து திமுகவிற்கு எதிராக பாய்ந்துள்ளது. அதற்கு பாஜகவும் பக்கபலமாக அறிக்கையும் வெளியிட்டு வருகிறது.
முதல் விஷயம்.. இன்று காலையிலேயே அமலாக்கத்துறை தமிழ்நாட்டின் முக்கியமான மணல் ஒப்பந்ததார்களை குறிவைத்து ரெய்டு நடத்தியது. மணல் குவாரி பணமோசடி வழக்கு தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன், தொழிலதிபர் திண்டுக்கல் ரத்னம், தொழிலதிபர் சண்முகத்தின் கிராவல் குவாரி உள்பட பல்வேறு முக்கிய விஐபிக்களை குறித்து வைத்து அமலாக்கத்துறை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை அதிமுக வரவேற்றுள்ளது. இந்த சோதனை ஒரு பக்கம் முக்கியமான அமைச்சரை குறிவைத்து நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது விஷயமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற கருப்பையா என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இடப் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற கருப்பையா மீது தேனியை சேர்ந்த அரசு மருத்துவர் காயத்ரி மற்றும் அவரது உறவினர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த கருப்பையாவை உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது விஷயம், கோவை பகுதியில் நடந்துள்ளது. கோவையில், பெண் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் பங்கெடுத்துவிட்டு வெளியில் வந்த குற்றவாளிகள் மூன்று பேரை, இரு சக்கர வாகனங்களில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியது. நீதிமன்ற வளாகத்திலிருந்தே பின்தொடர்ந்த கும்பல், அவர்களைத் துரத்திச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் குடியிருப்புப் பகுதியில் வைத்து, மூவரையும் வெட்டியது, கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று ஒரேநாளில்- 12/09/2023
— Raj Satyen (@satyenaiadmk) September 12, 2023
ஓய்வுபெற்ற வட்டாட்சியருக்கு அரிவாள் வெட்டு,
நீதிமன்ற வளாகத்தில் மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு,
மறுபுறம் தமிழகத்துக்கு நீர் திறந்துவிட முடியாதென திமுகவின் கூட்டணி
கர்நாடக அரசு அறிவிப்பு,
தண்ணீர் வழங்காததால் ஆளும் கட்சி எம்எல்ஏ-வை மக்கள்… pic.twitter.com/kMmXDWtKde
4வது விஷயம், இனிமேல் தமிழகத்துக்கு நீர் திறந்துவிட முடியாதென காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கர்நாடாக துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறும் போது, இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. தற்போது உள்ள தண்ணீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தண்ணீரை திறந்த விட முடியாது என்று கூறியுள்ளார்.
ஐந்தாவது விஷயம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து உள்ள பாப்பனபள்ளி ஊராட்சியில், தண்ணீர் வழங்காததால் , ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதனை மக்கள் சிறைப்பிடித்தார்கள். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.இந்த ஐந்து விஷயங்களை கையில் எடுத்துள்ள அதிமுக, திமுகவை நேரடியாக விமர்சித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பாஜகவும் தன் பங்கிற்கு திமுகவை காலையில் இருந்தே விமர்சித்து வருகிறது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications