'கணக்கு மாறுதா..' இபிஎஸ் ஆளுமைதான்..அதிமுகவை குறைத்து மதிப்பிடக்கூடாது..திருமாவளவன் சொல்றதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து விலகும் அளவிற்கு சுதந்திரமாக முடிவு எடுக்கக் கூடிய துணிச்சலை எடப்பாடி கொண்டு இருக்கிறார் அவ்வப்போது அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த துணிச்சல் அவரிடத்தில் இருக்கிறது. ஈரோடு தேர்தலில் கூட அவர் பாஜகவிற்கு அவர் காத்திருக்கவில்லை என்று பேசியுள்ள திருமாவளவன் அதிமுகவை தொடக்கூடாத கட்சியாக பார்க்கவில்லை என்றும் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

பாமக - திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று ஆணித்தரமாக சொல்லி வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்.

அதேபோல், அதேபோல் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்தார். குறிப்பாக இந்த மாத துவக்கத்தில் சென்னையில் பாஜகவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது திருமாவளவன் இவ்வறு பேசினார்.

எடப்பாடியை பாராட்டி பேச்சு

எடப்பாடியை பாராட்டி பேச்சு

மேலும், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம்" என்றார். திருமாவளவன் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் கவனம் பெற்றது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய தொல் திருமாவளவன், அதிமுகவின் சமூக நீதியை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமியை பாராட்டியும் பேசியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது.

நான் குறைத்து மதிப்பிடவில்லை

நான் குறைத்து மதிப்பிடவில்லை

திருமாவளவன் பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது: எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற ஆளுமைதான் அவரை இன்றைக்கு இந்த உயரத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அவரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஜெயலலிதா இல்லாத நிலையிலும் கூட 67 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அதிமுகவை சட்டமன்றத்தில் அமரக்கூடிய அளவிற்கு வழிநடத்தி தலைமை தாங்கி முன்னெடுத்து வந்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

பாஜகவால் தான் குளறுபடி

பாஜகவால் தான் குளறுபடி

ஆனாலும் கூட பாஜக அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. பாஜகவினுடைய தலையீடுகளால்தான் அதிமுகவில் இந்த குளறுபடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. இதை யாரும் மறுக்க முடியாது. ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் டெல்லியில் உட்கார்ந்து கருத்து, ஆலோசனை கேட்க கூடிய அளவிற்கு ஒரு நெருக்கடியை அதிமுகவிற்கு பாஜக ஏற்படுத்தியிருக்கிறது என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அதிமுகவிற்கு சில கொள்கை சார்ந்த பாரம்பரியங்கள் இருக்கிறது.

காலத்தின் நெருக்கடியாக உள்ளது

காலத்தின் நெருக்கடியாக உள்ளது

சமூக நீதியை பின்பற்றுவதில் அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. ஜெயலலிதா கூட 69 சதவிகித இடஒதுக்கீட்டை காப்பாற்றுவதற்கு எந்த அளவு போரடினார் என்று அனைவருக்கும் தெரியும். பாஜக சமூக நீதிக்கு நேர் எதிரான ஒரு அரசியல் கட்சி. அதனால்தான் அவர்கள் EWS கொண்டு வந்தார்கள். சமூக நீதியின் கருத்தை நீர்த்து போக செய்வதுதான் பாஜகவின் நோக்கம். அப்படிப்பட்ட ஒரு கட்சியுடன் அதிமுக கூட்டணி சேர்வது காலத்தின் நெருக்கடியாக உள்ளது.

எடப்பாடியிடம் துணிச்சல் இருக்கிறது

எடப்பாடியிடம் துணிச்சல் இருக்கிறது

தலைமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும், இதுபோன்ற நெருக்கடியில் தான் அதிமுக பாஜக கூட்டணி தொடர்வதாக நினைக்கிறேன். பாஜக கூட்டணியில் இருந்து விலகும் அளவிற்கு சுதந்திரமாக முடிவு எடுக்கக் கூடிய துணிச்சலை எடப்பாடி கொண்டு இருக்கிறார். அதனை அவ்வப்போது அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த துணிச்சல் அவரிடத்தில் இருக்கிறது. ஈரோடு தேர்தலில் கூட அவர் பாஜகவிற்காக அவர் காத்திருக்கவில்லை. நேரடியாக அவர் களத்திற்கு போய்விட்டார்.

ஈரோடு தேர்தலில் உணர முடிந்தது

ஈரோடு தேர்தலில் உணர முடிந்தது

பாஜகவை பிரசாரத்திற்கு கூப்பிடவில்லை, என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். பாஜகவை தவிர்த்து விட்டு வேலை செய்யலாம் என்று எடப்பாடி ஒரு எண்ணம் இருப்பதை ஈரோடு தேர்தலின் போதுதான் என்னால் உணர முடிந்தது. பாஜகவிற்கு கட்டுண்டு கிடக்கக் கூடாது என்பது அவரது அணுகுமுறையில் தெரிந்தது. அதை வைத்துதான் நான் ஒரு வேண்டுகோள்தான்..அதில் எனக்கு எந்த கணக்கும் கிடையாது.

தப்பித்தவறி காலூன்றி விட்டால்

தப்பித்தவறி காலூன்றி விட்டால்

இது இல்லையென்றால் அது.. அது இல்லையென்றால் இது என்ற அடிப்படையில் நான் இதை சொல்லவில்லை. அதிமுவை பயன்படுத்தி பாஜக இங்கே காலூன்ற நினைக்கிறது. அது தப்பித்தவறி காலூன்றி விட்டால் அதிமுக நினைத்தாலும் கூட அதை தடுக்க முடியாது. நம்மாலும் தடுக்க முடியாது. அந்த அளவிற்கு பாஜக ஆபத்தான கொள்கைகளை கொண்ட கட்சி. அதனால் வேண்டாம்.. தமிழ்சமூகம் அதிமுகவை பழிக்கும். முடிந்தவரையில் அதை தவிர்த்து விட்டு களத்திற்கு வாருங்கள் என தோழமையாக வேண்டுகோள் விடுத்தேன்.

அதிமுக வாக்கு வங்கி சிதறவில்லை

அதிமுக வாக்கு வங்கி சிதறவில்லை

அந்த மாதிரி ஒரு முடிவை எடுத்தார்கள் என்றால் 2026-ம் ஆண்டில் மிகப்பெரிய பயனை அவர்களுக்கு கொடுக்கும். மக்கள் அதிமுக மீது பெரிய நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பாஜகவை தொடர்ந்து கூட்டணியில் வைத்துக்கொண்டு இயங்க வேண்டும் என்ற பயத்தில் இருந்து எடப்பாடி விடுபட்டு விட்டார் என்றே நான் நினைக்கிறேன். அதிமுக வாக்கு வங்கி சிதறவில்லை. அப்படியேதான் உள்ளது. அதிமுகவை தொடக்கூடாத கட்சியாக பார்க்கவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+