வலையில் சிக்கிய கொங்கு மண்டல கெளுத்தி.. பாஜகவிற்கு தாவும் அதிமுக புள்ளி? உச்சம் எடுக்கும் மோதல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக இடையே தமிழ்நாட்டில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ஒரு சில அதிமுக தலைகள் பாஜக பக்கம் செல்ல திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாடு பாஜகவில் கடந்த 10 ஆண்டுகளாக முக்கிய தலைவர்களாக இருந்த பலரும் தற்போது ஆக்டிவ் அரசியலில் இருந்து மாற்றப்பட்டு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு பாஜகவிலும் இளம் தலைவர்களுக்கு தற்போது முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

AIADMK vs BJP: A top Kongu leader may ditch Edappadi Palanisamy and join Saffron party?

தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.அண்ணாமலையின் நியமனத்திற்கு பின் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. பல இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள், பல்வேறு அணி தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. பாஜகவின் பிரபலமான சீனியர்கள் யாரும் தற்போது கட்சியில் ஆக்டிவாக இல்லை.

ஒதுக்கப்பட்ட சீனியர்கள்: இன்னொரு பக்கம் பாஜகவில் சீனியர்களாக இருந்த பல்வேறு தலைவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக எல் . முருகனுக்கு முன்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தமிழிசை தூத்துக்குடியில் தோல்வி அடைந்த பின் 2019ல் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இவர் ஆளுநர் ஆன பின் எல் முருகன் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து தமிழ்நாடு பாஜகவில் மூத்த தலைவராக வலம் வந்த முன்னாள் தலைவர் இல கணேசன் 22ம் தேதி ஆகஸ்ட், 2021 அன்று மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக மேற்கு வங்க ஆளுநராக இல கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அதன்பின் இவருக்கு வழங்கப்பட்ட மேற்கு வங்க ஆளுநர் கூடுதல் பொறுப்பு நீக்கப்பட்டது. மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவராக முன்பு இருந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரும் ஆளுநர் ஆகிவிட்டார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பதவி என்பது அரசியலில் இருந்து வழங்கப்படும் ரிட்டயர்மெண்ட் போன்றது ஆகும். ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுக்கி தள்ளாமல் அவர்களுக்கு மரியாதையாக வழங்கப்படும் ரிட்டயர்மெண்ட் ஆகும்.

தூக்க முடிவு: பாஜகவில் தற்போது பெரிய முகமாக, கட்சியின் சீனியர் தலை என்று மக்களிடம் பிரபலமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை. இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ஒரு சில அதிமுக தலைகள் பாஜக பக்கம் செல்ல திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. கட்சிக்கு முகமாக இருக்கும் விதமாக ஒரு சிலரை தூக்க அக்கட்சி திட்டமிட்டு வருகிறதாம்.

அதிமுக பாஜக இடையே தமிழ்நாட்டில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் இந்த திட்டத்தில் இறங்கி உள்ளார்களாம். அதிமுக பாஜக இடையே தற்போது தீவிர மோதல் நிலவி வருகிறது. தேசிய அளவில் பாஜக அதிமுக நட்பாக இருந்தாலும் உள்ளூர் அளவில் அதிமுக பாஜக இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலையின் சில பேச்சுக்கள் காரணமாக அதிமுக - பாஜக இடையே மோதல் உச்சத்தில் உள்ளது.

முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார். இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கட்சியின் 2-3 டாப் லீடர்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்கும் என்கிறார்கள். முக்கியமாக லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு முகமாகும் விதமாக கொங்கு மண்டலத்தில் இருந்து அதிமுகவின் "கெளுத்தி" மீன்களை அள்ளிப்போடும் திட்டத்தில் தமிழ்நாடு பாஜக இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+